பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

5.70% வாக்குகள்... பாஸ்வான் மறைவால் எழுந்த அனுதாப அலையில் ஜேடியூவை மூழ்க வைத்த சிராக் பாஸ்வான்

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் தேர்தலில் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவால் எழுந்த அனுதாப அலையில் ஜேடியூவை மூழ்க வைத்திருக்கிறார் அவரது மகன் சிராக் பாஸ்வான்.

Recommended Video

    JDU-வை மூழ்க வைத்த சிராக் பாஸ்வான் | Oneindia Tamil

    பீகார் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நிச்சயம் பாஜகவுக்கும் எல்ஜேபி தலைவர் சிராக் பாஸ்வானுக்கும் பெரும் சந்தோசத்தை கொடுத்திருக்கும். ஏனெனில் அவர்கள் திட்டம் போட்டு செயல்பட்டதற்கு கை மேல் பலன் கிடைத்திருக்கிறது.

    பீகார் டுவிஸ்ட்.. கிங் மேக்கராக மாறும் சிராக் பாஸ்வான்? பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடிப்பாரா?பீகார் டுவிஸ்ட்.. கிங் மேக்கராக மாறும் சிராக் பாஸ்வான்? பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடிப்பாரா?

    மத்திய அமைச்சர் பதவி

    மத்திய அமைச்சர் பதவி

    பீகாரில் கூட்டணியில் இருந்தாலும் கூட ஜேடியூவை தலையெடுக்க விடாமல் செய்வதற்கான ஒரே ஆயுதமாக பாஜகவால் களமிறக்கப்பட்டவர் சிராக் பாஸ்வான். மற்றபடி பீகாரில் ஆட்சி அமைக்கக் கூடிய கனவு எதுவும் சிராக் பாஸ்வானுக்கு இருந்ததும் இல்லை. பாஜகவின் எண்ணங்களை செயல்படுத்துகிற கட்சியாக இருக்க வேண்டும்; இதற்கு பரிசாக மத்திய அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்பதைத் தவிர சிராக் பாஸ்வானுக்கு வேறு எந்த அஜெண்டாவும் இல்லை.

    உச்சகட்ட விசுவாசம்

    உச்சகட்ட விசுவாசம்

    இதனால்தான் ஜேடியூவை எதிர்த்து வேட்பாளர்களை சிராக் பாஸ்வான் நிறுத்திய போதும் பாஜக நமட்டுச் சிரிப்பு காட்டி வேடிக்கை பார்த்தது. பிரதமர் மோடி படத்தை பெயரை பயன்படுத்தக் கூடாது என்று பெயரளவுக்கு கண்டித்தது. ஆனால் சிராக் பாஸ்வானோ, நெஞ்சை கிழித்து காட்டவா? உள்ளே மோடிதான் இருக்கிறார்.. நான் ராமருக்கு அனுமார் போல... என்று உச்சகட்ட விசுவாசத்தை காட்டிக் கொண்டார்.

    பலியாடான ஜேடியூ

    பலியாடான ஜேடியூ

    இந்த பாஜக-எல்ஜேபி நாடகங்களை தொடக்கம் முதலே ஜேடியூ ரசிக்கவில்லை. ஏனெனில் அந்த கட்சிக்கு தெரியும்.. இவர்களது நாடகத்தால் பலியாடாகப் போவது தாம்தான் என்று. அதனால்தான் இரு படகில் சவாரி செய்தால் பேரழிவுதான் கிடைக்கும் என்றெல்லாம் எச்சரித்து பார்த்து வெறுத்துப் போனது ஜேடியூ.

    பாஸ்வான் மறைவால் அனுதாப அலை

    பாஸ்வான் மறைவால் அனுதாப அலை

    இந்த நிலையில் சிராக் பாஸ்வானின் தந்தையான ராம்விலாஸ் பாஸ்வான் மரணமடைந்தார். இதனால் நிச்சயமாக எல்ஜேபிக்கு அனுதாப அலை கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததாகிவிட்டது. இந்த அனுதாப அலையானது ஜேடியூவை மூழ்கடிக்கப் போகிற சுனாமியாகவும் இருக்கும் என்று அந்த கட்சி உட்பட அத்தனை கட்சிகளும் உணர்ந்தே இருந்தன.

    ஜேடியூவின் பரிதாப நிலை

    ஜேடியூவின் பரிதாப நிலை

    இப்போது தேர்தல் முடிவுகளும் அதைத்தான் காட்டுகின்றன. எல்ஜேபிக்கு 5.07% வாக்குகள் கிடைத்திருக்கின்றன. ஆனால் 1 தொகுதிகயில்தான் எல்ஜேபி வென்றுள்ளது. பல தொகுதிகளில் ஜேடியூவை அந்தரத்தில் தொங்கவிட்டு பாஜகவின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார் சிராக் பாஸ்வான். இதனால் பாஜக, ஜேடியூவைவிட அதிக இடங்களை பெற்றிருக்கிறது. இதனால் எங்கேபோய் முட்டிக் கொள்வது என தெரியாமல் நடுத்தெருவில் விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறது பரிதாப ஜேடியூ.

    English summary
    LJP gets 6.03% Votes in Bihar Assembly Elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X