நோட்டாவிடம் தோற்ற கம்யூனிஸ்ட்கள்.. பீகார் தேர்தலில் கட்சிகளின் வாக்கு சதவீதம் இதுதான்
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தான் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட இன்னும் சில கட்சிகள் நோட்டாவை விட குறைந்த வாக்குகள் பெற்று படுதோல்வியடைந்துள்ளன.
பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைக்க உள்ளது. இந்தமுறை முதல்வர் பதவி யாருக்கு? என்பது இன்னும் முடிவாகவில்லை.

பாஜக கூட்டணியில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியை விட பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் கடந்த முறையை போல் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராவாரா? இல்லாவிட்டால் பாஜகவுக்கு முதல்வர் பதவியை வைத்து கொள்ளுமா? என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.
இந்நிலையில் தான் பீகார் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் வருமாறு: பாஜக கூட்டணியில் அதிகபட்சமாக பாஜக 20.08 சதவீதம் ஓட்டுகளை பெற்றுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக நிதிஷ் குமாரின் ஜேடியூ கட்சி 19.25 சதவீதம் ஓட்டுகளை பெற்றுள்ளது. மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் எல்ஜேபிஆர்பி கட்சி 4.97 சதவீதம் ஓட்டுகளை பெற்றுள்ளது.
மாறாக எதிர்க்கட்சிகளின் ‛மகாகத் பந்தன்' கூட்டணியில் அதிகபட்சமாக தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி கட்சி 23.00 சதவீதம் ஓட்டுகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 8.71 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் உள்ள சிபிஐ (எம்எல்)(எல்) கட்சி 2.84 சதவீதம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 0.74 சதவீதம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் 0.60 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது.
இந்த தேர்தலில் யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்பதை குறிக்கும் நோட்டாவுக்கு மொத்தம் 1.81 சதவீதம் ஓட்டுகள் கிடைத்துள்ளது. அந்த வகையில் பார்த்தால் இந்திய கம்யூனிஸ்ட் (பெற்ற ஓட்டு 0.74 சதவீதம்)மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (பெற்ற ஓட்டு 0.60 சதவீதம்) நோட்டாவை விட குறைந்த அளவில் ஓட்டுகள் வாங்கி உள்ளன.

இது மட்டுமின்றி ஏஏஏபி கட்சி 0.30 சதவீதம், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 1.62 சதவீதம், என்சிபி 0.03 சதவீதம், என்பிஇபி கட்சி 0.01 சதவீதம் ஓட்டுகள் பெற்று நோட்டாவை விட பின்தங்கி உள்ளன. இந்த தேர்தலில் அசாதுதீன் ஓவைசியின் கட்சியான ஏஐஎம்ஐஎம் கட்சி 1.85 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. இது நோட்டாவை விட 0.04 சதவீதம் மட்டுமே அதிகமாகும்.மற்றவர்கள் 14 சதவீதம் ஓட்டுகள் பெற்றுள்ளன. இதில் தேர்தல் பிரசார வியூக நிபுணர் பிரசாந்த் கிசோரின் ஜன்சுராஜ் கட்சியும் அடங்கும். அதில் ஜன்சுராஜ் கட்சி 2 அல்லது 3 சதவீதம் ஓட்டு பெற்றிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி 123 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இன்று வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பாஜக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.மாறாக எதிர்க்கட்சிகளின் ‛மகாகத்பந்தன்' கூட்டணி படு தோல்வியடைந்துள்ளது. இந்த கூட்டணி மொத்தம் 35 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
பாஜக கூட்டணியில் பாஜக 89 தொகுதி, நிதிஷ் குமாரின் ஜேடியூ எனும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி 85 தொகுதி, மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் எல்ஜேபிஆர்வி கட்சி எனும் லோக்ஜன்சக்தி கட்சி (ராம்விலாஸ்) கட்சி 19 தொகுதி, மத்திய அமைச்சர் ஜிதன்ராம் மஞ்சியின் எச்ஏஎம்எஸ் எனும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (செக்குலர்) கட்சி 5 தொகுதி, உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (ஆர்எஸ்எச்டிஎல்கேஎம்) கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
மாறாக ‛மகாகத்பந்தன்' கூட்டணியில் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி எனும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் உள்ள சிபிஐ(எம்எல்) (எல்) கட்சி 2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஐஐபி எனும் இந்தியன் இன்க்ளூசிவ் கட்சி தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த 2 கூட்டணியை தவிர்த்து தனியாக போட்டியிட்ட அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளிலும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications