பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பார்த்தீங்களா.. ஜஸ்ட் 10 நிமிட வீடியோதான்.. ஆடிக்காரையே வாங்கிட்டாராம்.. 50 லட்ச ரூபாயாமே.. சபாஷ்

50 லட்சம் மதிப்பில் ஆடி கார் வாங்கி கலக்கி உள்ளார் பீகார் யூடியூபர் ஒருவர்

Google Oneindia Tamil News

பாட்னா: மும்பை இளைஞர் ஒருவர் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளார்.. ஆடிகாருடன் வலம்வரும் இந்த நபர் யார் என்ற ஆர்வமும் இணையவாசிகளுக்கு ஏற்பட்டு வருகிறது.

சமீப காலமாகவே, உலகம் முழுவதும் யூடியூப் சேனல்கள் மூலம் சம்பாதிப்பது என்பது அதிகரித்திருக்கிறது. சிலர் தங்களது யூடியூப் வீடியோவுக்காகவும், ஏராளமான சப்ஸ்க்கிரைபர்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், எந்த உச்சக்கட்டத்துக்கும் சென்றுவிடுகிறார்கள்.

இந்த யூடியூப் வைத்தே லட்சக்கணக்கில் சம்பாதிப்பவர்களும் உண்டு.. ஆனால், அதை நாம் பயன்படுத்தும் வகையை பொறுத்தே அமைகிறது.. கடந்த வருடம், சேலத்தை சேர்ந்த மதன் இந்த சர்ச்சையில் சிக்கினார்..

சொகுசு

சொகுசு

பப்ஜி விளையாட்டை லைவ் ஸ்ட்ரீமிங் செய்து அதில் ஆபாசமாக அருவருக்கத் தக்க வகையில் பேசி யூ ட்யூபில் வெளியிடவும், அது மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.. இதனால், இவரது வங்கிக் கணக்குகளில் பணம் குவிய தொடங்கிவிட்டது.. ஆடி கார், சொகுசு வாழ்க்கை என பப்ஜி மதனின் வாழ்க்கையே திசை திரும்பியது.. ஆபாசமாக பேசி பேசியே ஆடி கார் வாங்கிட்டாரே என்று இவர் கைதானபோது, இணையத்தில் நிறைய கமெண்ட்களும் உலாவந்தன. ஒருசிலர் இப்படி இருந்தாலும், பெரும்பாலானோர், கடினமாகவும் உழைத்து தங்கள் யூடியூப் சேனலை முன்னுக்கு கொண்டு வருவதையும், மக்களின் நன்மதிப்பை இவர்கள் தொடர்ந்து பெற்றுவருவதையும் மறுக்க முடியாது..

 யூடியூப் சேனல்

யூடியூப் சேனல்

அந்தவகையில், ஹர்ஷ் ராஜ்புட் என்ற இளைஞர் பேசப்பட்டு வருகிறார். இவரது அப்பா பீகார் போலீசில் டிரைவராக வேலை பார்த்தவர். ஹர்ஷ் ராஜ்புட், பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்.. அவுரங்காபாத்தில் உள்ள ஜாசோயா என்ற இடத்தில் பிறந்தவர்.. இப்போதைக்கு மும்பையில் வசித்து வருகிறார்.. தற்போது சொந்தமாகவே யூடியூப் சேனலை வைத்து நடத்தி வருகிறார்.. மும்பைக்கு வருவதற்கு முன்பு டெல்லியில் சில நாடகங்களை நடித்து வந்திருக்கிறார். அப்போது கொரோனா உச்சத்தில் இருந்த நேரம் என்பதால், திரையுலகமே ஸ்தம்பித்துவிட்டது..

 சான்ஸ் இல்லை

சான்ஸ் இல்லை

அதனால் நடிப்பதற்கு வாய்ப்பு இல்லாமல், வீட்டில் முடங்கிகிடந்தபோதுதான், இந்த யூடியூப் சேனலை சொந்தமாக தொடங்கி உள்ளார்.. நிறைய காமெடி வீடியோக்களை அதில் பதிவிடுவார்.. எல்லா வீடியோவும் 10 நிமிடம்தான் இருக்கும்.. ஆனால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு.. 33 லட்சம் சப்ஸ்க்ரைபர்ஸ் இவரது சேனலுக்கு உள்ளார்களாம்.. இவருக்கு மாதந்தோறும் 8 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறதாம்.. இதைதவிர, பிராண்ட் புரோமோஷன்கள் மூலமும் நிறைய வருவாய் வருகிறது..

 ஆடி கார்

ஆடி கார்

கடந்த ஜுன் 2022 முதல் அக்டோபர் 2022 வரை அவருக்கு கூகுள் விளம்பர பிரிவிலிருந்து மட்டும் ஒரு மாதத்துக்கு ரூ.4.5 லட்சம் கிடைத்ததாம்... இப்போது என்ன விஷயம் என்றால், யூடியூப் மூலம் கிடைக்கும் வருவாயில், சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் ராஜ்புட், ஆடி காரையே வாங்கிவிட்டாராம்... அந்த கார் 50 லட்சம் ரூபாய் என்கிறார்கள்.. இப்போது அந்த காரில்தான் வலம்வந்து கொண்டிருக்கிறார்.. உழைப்பும் திறமையும் யாரையுமே, மேலே கொண்டுவந்துவிடும் என்பதற்கு இளைஞர் ராஜ்புட் ஒரு உதாரணமாக திகழ்கிறார் என பாராட்டுக்களை சொல்லி வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.

English summary
Special talent and Bihar boy buys Audi worth Rs 50 lakh from YouTube earnings
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X