கணவனுக்காக ஊரை எரிச்சது அந்த காலம்! கணவனோடு குடும்பத்தையே எரித்த ‘பர்வீன்’..! என்ன காரணம் தெரியுமா?
பாட்னா : பீகார் மாநிலத்தில் கணவன் 2வது திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் கணவன், 2வது மனைவி மற்றும் அவரது குடும்பத்தையே பெண் தீவைத்து எரித்துக் கொலை செய்ததோடு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கணவனுக்காக மதுரையை எரித்த பெண் கண்ணகி குறித்த கதையை அனைவரும் கேள்வி பட்டு இருப்பீர்கள். வேறொரு பெண்ணுடன் பழகியது தெரிந்தும் அவனுக்காக மன்னர் அவையில் ஏறி நீதிகேட்டு கொதித்தெழுந்த உதாரணத்தை அடிக்கடி இன்றளவும் கிராமப்புறங்களில் கூறுவது உண்டு.
இதற்கு நேர்மாறாக பீகாரில் மாநிலத்தில் உள்ள தர்பங்காவில் உள்ள பிரௌல் காவல் நிலையப் பகுதியில் நெஞ்சை உலுக்கும் சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி சம்பவம்
பிரௌல் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஷேக்புரா பகுதியில் உள்ள ஷேக்புரா பகுதியில் தனது கணவரின் இரண்டாவது திருமணத்தால் கோபமடைந்த பெண் ஒருவர், ஒட்டுமொத்த குடும்பத்தையும் நாசம் செய்யும் அளவுக்கு நடவடிக்கை எடுத்துள்ளார். இனி அழுவதற்கு இங்கு யாரும் இல்லை. காரணம் மொத்த குடும்பமுமே எரித்துக் கொலை செய்யப்பட்டது. இதற்கு காரணம் ஒரு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

பெட்ரோல் ஊற்றி எரிப்பு
பீகாரின் சுபால் பஜாரின் ஷேக்புரா பகுதியில் இன்று காலை குர்ஷித் ஆலம் என்பவரது இரு மனைவிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி தகராறாக மாறி கலவரமாக வெடிக்க விஷயம் பெரிதாகி, ஆலமின் முதல் மனைவி பர்வீன், கணவன், அவரது 2வது மனைவி உள்ளிட்ட 4 எர்ர் மீது பெட்ரோலை ஊற்றியதோடு, அவர்கள் வசிக்கும் வீட்டுக்கும் தீ வைத்தார். இதைத் தொடர்ந்து அவரும் தற்கொலை செய்து கொண்டார். சில நிமிடங்களில் வீடு தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

4 பேர் பலி
அப்பகுதி மக்கள் திரண்டு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்குள் கொண்டு வருவதற்குள் குர்ஷித் ஆலமின் முதல் மனைவி பர்வீன் மற்றும் அவரது மாமியார் உயிருடன் எரிந்தனர். குர்ஷித் ஆலம் மற்றும் அவரது இரண்டாவது மனைவி ரோஷ்னி கடுமையான தீக்காயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக தர்பங்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

2வது திருமணம்
இந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் நடைபெற்றுள்ளதாகவும், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். ஷேக்புரா மொஹல்லாவில் வசிக்கும் குர்ஷித் ஆலம், அதே கிராமத்தைச் சேர்ந்த பர்வீன் என்பவரை 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களுக்கு குழந்தை இல்லாததால், குர்ஷித் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ரோஷ்னி கட்டூன் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு ஆரம்பத்திலிருந்தே பர்வீன் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

போலீசார் விசாரணை
இதுமட்டுமின்றி 2வது திருமணத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் குர்ஷித்தை எச்சரித்திருந்தார் பர்வீன். கடந்த காலங்களில் இவ்விவகாரம் இருவருக்குமிடையே பலமுறை விவாதம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இறுதியாக, சனிக்கிழமை அதாவது இன்று காலை, பர்வீன் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.












Click it and Unblock the Notifications