பீகாரில் கையில் துப்பாக்கியுடன் ஆட்டம்.. பார்ட்டியில் நடந்த கூத்து.. சர்ச்சையான வீடியோ!
பாட்னா: பீகார் மாநிலத்தில் உள்ள சிவான் பகுதியில் நடைபெற்ற பார்ட்டி ஒன்றில் பெண் நடனக் கலைஞர் ஒருவர் துப்பாக்கியை காட்டியபடி ஆடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
நண்பர்களின் பிறந்தநாள், திருமண நாள் அல்லது திருமணம் நிகழ்ச்சி என பலவற்றுக்கும் தற்போது பார்ட்டி கொடுப்பது வழக்கம். அந்த பார்டிகளின்போது ஆட்டம் பாட்டத்துடன் ஒருசிலர் கொண்டாடுவதுண்டு.
ஆனால் பார்ட்டிகளின் போது துப்பாக்கியை காட்டிக்கொண்டு ஆடுவதும்.. சில சமயங்களில் வானை நோக்கி சுட்டுக்கொண்டு ஆட்டம் போடுவதெல்லாம் உத்தர பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களில் சர்வ சாதாரணமாக காணமுடியும்.

சட்டவிரோத கொண்டாட்டங்கள்
சட்டவிரோதமான இந்த செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டாலும் அடிக்கடி இதுபோன்ற கொண்டாட்டங்கள் எல்லாம் மிகச் சாதரணமாக வட இந்திய மாநிலங்களில் நடக்கின்றன. இத்தகைய கொண்டாட்டங்களின் போது உயிழப்புகள், படுகாயங்கள் கூட ஏற்படுகின்றன. ஆனாலும் இதையெல்லாம் பொருட்படுத்தாத கும்பல்கள் சட்டவிரோதமாக இத்தகைய கொண்டாட்டங்களில் ஈடுபடத்தான் செய்கின்றன.

துப்பாக்கியை காட்டியபடி
அந்த வகையில்தான் தற்போதும் ஒரு வீடியோதான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள சிவான் பகுதியில் நடைபெற்ற பார்ட்டி ஒன்றில் பெண் நடனக் கலைஞர் துப்பாக்கியை காட்டியபடி ஆடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியிருக்கிறது. பத்திரிகையாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு ஒரு பெண் நிகழ்ச்சியில் நடனமாடி கொண்டு இருக்கிறார்.

பார்ட்டி நிகழ்ச்சி முழுவதும்
இந்தப் பெண் கையில் வைத்திருப்பது அவருடைய சொந்த துப்பாக்கியா அல்லது பார்ட்டியில் கலந்து கொண்டவர்கள் யாராவது கொடுத்தார்களா? என்ற விவரம் தெரியவில்லை. பார்ட்டியில் ஆடும் அந்தப்பெண்ணை நோக்கி சில இளைஞர்கள் செல்கிறார்கள். ஆனால் அவர்களை கிட்ட வரவேண்டாம் என்பது போல துப்பாக்கியால் நகருமாறு பாவனை செய்கிறார். பார்ட்டி நிகழ்ச்சி முழுவதும் கையில் துப்பாக்கியை ஏந்தியபடித்தான் அந்தப்பெண் நடனமாடுகிறார்.

பயம் இல்லை போல
சட்டவிரோதமாக இப்படி துப்பாக்கியை வைத்துக்கொண்டு ஆடும் பெண் மீதோ, பார்ட்டி ஏற்பாட்டாளர்கள் மீதோ நடவடிக்கை எடுத்ததாக இதுவரை தகவல் எதுவும் இல்லை. இந்த வீடியோவை பகிர்ந்த நிதேஷ் ஸ்ரீவத்சவா என்ற பத்திரிகையாளர் தனது பதிவில் கூறியிருப்பதாவது:- ''பார்ட்டியில் ஆடும் பெண்ணிடம் துப்பாக்கியை கொடுக்கும் இளைஞர் இணைந்து ஆட்டம் போடுகிறார். போலீஸ் மீதெல்லாம் அவருக்கு எந்த பயமும் இல்லை போல...'' என்று பதிவிட்டுள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications