ரவுடியை கொல்ல.. போலீஸ் மீது நாட்டு வெடிகுண்டை வீசிய கும்பல்! என்ன நடந்தது பெரம்பலூரில்?
பெரம்பலூர்: போலீஸ் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீஸ் ஐ.ஜி.பாலகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி தான் வெள்ளைக்காளி. இவர் மீது 8 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் இருக்கின்றன. இது தவிர பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக வேறு சில வழக்குகளும் இருக்கின்றன.

இந்நிலையில் இன்று, புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வெள்ளைக்காளியை ஆஜர் படுத்து விட்டு, சென்னைக்கு வாகனத்தில் போலீசார் அளித்து சென்று கொண்டிருந்தனர். வாகனம் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே.. தேசிய நெடுஞ்சாலையில் உணவு சாப்பிடுவதற்காக நிறுத்தப்பட்டது.
போலீசார் மற்றும் ரவுடி வெள்ளைக்காளி ஆகியோர், உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது.. திடீரென இரண்டு கார்களில் அங்கு வந்த மர்மம் கும்பல், போலீசார் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டை வீசியது. இதில் காவலர்கள் விக்னேஷ் குமார், மாரிமுத்து, பாண்டி ஆகியோர் காயம் அடைந்தனர்.
இருப்பினும் ரவுடிக்கு எந்த காயமும் இன்றி போலீசார் பாதுகாப்பு கொடுத்திருந்தனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், போலீஸார் வாகனம் மீது நாட்டு வெடி வீசி ரவுடி வெள்ளைக்காளியை கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. மேலும், பாதுகாப்பு போலீஸ் எஸ்ஐ ராமச்சந்திரன் என்பவர் தனது துப்பாக்கியால் சுட்டபோது.. மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர் எனவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, "திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளைக்காளி என்ற குற்றவாளியை அழைத்துச் சென்று கொண்டிருந்தோம். வாகனங்களில் ஏற்கனவே ஆயுதம் தாங்கிய போலீசார் இருந்தனர். இடையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது.. மர்ம நபர்கள் வெள்ளைக் காளையை கொலை செய்ய முயன்றனர். அப்போது பாதுகாப்புக்காக இருந்த போலீஸ் உடனடியாக குற்றவாளியை பாதுகாத்தார்.
போலீஸ் எஸ் கார்டு எஸ்ஐ, உடனடியாக துப்பாக்கியால் குற்றவாளிகளை நோக்கி சுட்டபோது.. அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். தப்பி சென்றவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்" என தெரிவிக்கிறார்.
-
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
ஒரே நாளில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. 17 மாவட்ட எஸ்.பிக்கள் அதிரடியாக மாற்றம் - அரசு உத்தரவு -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங்












Click it and Unblock the Notifications