"தம்பி.. என்னாச்சு".. பதறிய தமிழிசை.. நடுவழியில் காரை விட்டு இறங்கி.. சல்யூட் வைக்கும் புதுச்சேரி..!
புதுச்சேரி: விபத்தில் காயமடைந்த இளைஞர் ஒருவருக்கு முதலுதவி அளித்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார்... ஏதோ நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்ததாக தெரிகிறது.. பூ, பட்டுப்புடவை அணிந்திருந்தார்.
அப்போது அவர், படாலம் கூட்ரோடு அவர் காரில் செல்லும்போது ஒரு இளைஞர் ரத்த காயத்துடன் போராடி கொண்டிருந்தார்..

இளைஞர்
இதை பார்த்து பதறி போன தமிழிசை, உடடினயாக காரை நிறுத்த சொல்லிவிட்டு, என்னாச்சு தம்பி.. என்று பதைபதைத்து கேட்டபடி அந்த இளைஞர் அருகில் சென்றார்.. அப்போதுதான் விபத்து ஒன்றில் அவர் சிக்கி முகம், தலை என உடம்பெல்லாம் ரத்தம் வழிந்து கிடப்பதை கண்டார்.. உடனே, அங்கேயே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார் தமிழிசை.. பிறகு, தன்னுடைய பாதுகாப்பு வாகனத்தில் அந்த இளைஞரை ஏற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்... அவருடன் காவலர் ஒருவரும் சென்றார்..

ட்ரீட்மென்ட்
அத்துடன் தமிழிசை விடவில்லை.. அந்த ஆஸ்பத்திரியில் சம்பந்தப்பட்ட டாக்டரை தொடர்பு கொண்டு இளைஞருக்கு உடனடியாக ட்ரீட்மென்ட் அளிக்க ஏற்பாடு செய்தார்.. அதற்கு பிறகும் போன் செய்து விசாரித்துள்ளார் தமிழிசை.. இளைஞருக்கு ரத்தக் கசிவு இப்போது நின்றுள்ளதாம்.. ஆபத்து இல்லை, நன்றாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.. இதைக் கேட்டபிறகுதான் சம்பவ இடத்தில் இருந்தே நகர்ந்தார் தமிழிசை.

ரத்த காயம்
பிறகு இது சம்பந்தமாக ஒரு ட்வீட்டும் போட்டுள்ளார்.. "புதுச்சேரியிலிருந்து சென்னை செல்லும் வழியில் இளைஞர் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு இரத்த காயத்துடன் காணப்பட்டார். அவருக்கு உடனே முதலுதவி அளித்து என்னுடன் வந்த பாதுகாப்பு வாகனத்தில் காவலர் ஒருவருடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மருத்துவரை தொடர்பு கொண்டு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தேன்.
|
விபத்து
விபத்துக்குள்ளான இளைஞருக்கு இரத்த கசிவு நிறுத்தப்பட்டு நலமுடன் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும். அதிவேகத்தில் செல்வது, தொலைபேசியை பயன்படுத்துவதை தவிர்த்தால் விபத்துகளை தடுக்கலாம்" என்று அறிவுறுத்தி உள்ளார்.