புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காஷ்மீரில் வீர மரணம் அடைந்த 44 பேருக்கு புதுவை போராட்டக்களத்தில் நாராயணசாமி மெளன அஞ்சலி

Google Oneindia Tamil News

Recommended Video

    காஷ்மீரில் வீர மரணம் அடைந்த 44 பேருக்கு புதுவை போராட்டக்களத்தில் நாராயணசாமி மெளன அஞ்சலி -வீடியோ

    புதுச்சேரி: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பில் சிக்கி வீர மரணமடைந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் போராட்டக் களத்திலேயே எழுந்து நின்று2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.

    காஷ்மீரில் நேற்று எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக சென்று கொண்டிருந்த சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் குண்டு வெடிப்பு நடத்தினர். இச்சம்பவத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் 44 பேர் உயிரிழந்தனர்.

    cm and minister paying tribute to crpf death

    வீரர்களின் உயிரிழப்பிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் நாரயணசாமி ஆளுநர் கிரண்பேடி ஆகியோர் டி விட்டரில் வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

    துணைநிலை ஆளுநரை கண்டித்து ஆளுநர் மாளிகை முன்பு 3 வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், போராட்டகளத்தில் முதலமைச்சர் நாராயணசாமி அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தனர்.

    இதனிடையே தர்ணா போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகில் தடுப்புகளை அமைத்து துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருவதால், ஆளுநர் மாளிகைக்கு அருகில் இல்லாமல் தலைமை தபால் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து முதலமைச்சர் நாராயணசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டததை அடுத்து முதலமைச்சர் நிர்வாகிகளிடம் சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியாக முறையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடும்படி கேட்டு கொண்டதின் பேரில் நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    English summary
    Puducherry CM Narayanasamy and his ministers paid their 2 miniures silent tribute to the 44 CRPF Martyrs today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X