Vijay: புதுவை தவெக பொதுக் கூட்டத்தில் ஒரு pass-க்கு எத்தனை பேர் அனுமதி? போலீஸாரிடம் வாக்குவாதம்
புதுச்சேரி: புதுவையில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான பொதுக் கூட்டத்திற்கு கட்சி தொண்டர்களுக்கு அளிக்கப்பட்ட பாஸில் எத்தனை பேருக்கு அனுமதி என்ற குழப்பம் ஏற்பட்டு, இது தொடர்பாக காவல் துறையினருடன் வாக்குவாதம் செய்து வருகிறார்கள்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு, சுமார் 73 நாட்களாக எந்த பொதுக் கூட்டத்தையும் விஜய் நடத்தவில்லை. காஞ்சிபுரம் நடத்தியது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி. இது கூட உள்ளரங்கில் நடத்தப்பட்டது.
ஆனால் திறந்த வெளியில் அவர் நடத்துவது தற்போது புதுவையில்தான். ரோடு ஷோவிற்கு அனுமதி கேட்டு அது கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள 5000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் QR கோடுடன் கூடிய பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதை நுழைவு வாயில் அருகே காண்பித்தால் போலீஸார் ஸ்கேன் செய்து அந்த பாஸ் உண்மை என்ற பட்சத்தில் அவர்களை உள்ளே அனுமதிப்பார்கள்.
ஒரு வேளை போலி பாஸ் என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு பாஸுக்கு ஒருவரை மட்டும் போலீஸார் அனுமதிக்கிறார்கள். இதனால் அங்கு போலீஸாருடன் தொண்டர்கள் வாக்குவாதம் செய்து வருகிறார்களாம்.
புதுவை விஜய் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஒரு பாஸுக்கு 2 பேர் வரலாம் என பாஸ் வழங்கும் போது நிர்வாகிகள் தெரிவித்தனராம். ஆனால் தற்போது ஒரு பாஸுக்கு ஒருவர் மட்டுமே அனுமதி என்பதால் தொண்டர்கள் அவதியடைகிறார்கள். மேலும் சிலர் முண்டியடித்துக் கொண்டு உள்ளே செல்ல முயற்சிக்கிறார்கள். போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தி, கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி வருகிறார்கள்.
த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று புதுச்சேரி, உப்பளத்தில் காலை 10.30 மணிக்கு தவெக தலைவர் விஜய்யின் புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்குப் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என விஜய் ஒப்புதலோடு கேட்டுக்கொள்கிறோம். கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்கள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அனுமதி இல்லை. விஜய், நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும்போதும் அவரது வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வாகனங்களிலோ பின்தொடர்வது, போக்குவரத்திற்கு இடையூறாகச் செயல்படுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள் ஆகியவற்றின் மீது ஏறக் கூடாது. மின்விளக்குக் கம்பங்கள், மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் ஆகியவற்றின் அருகில் செல்லக் கூடாது. சிலைகள் மற்றும் அவற்றைச் சுற்றி ஏதும் பாதுகாப்பு கிரில் கம்பிகள், தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, அப்பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும், பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், பள்ளி மாணாக்கர்களுக்கும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
Moral போலீசா சிங்கப்பெண்கள் படை? முதல் திட்டமே சொதப்பல்! சரமாரியாக எழும் குற்றச்சாட்டுகள்! -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
சில நாய்களுக்கு நான்வெஜ்தான் பிடிக்கும்.. ராகவா லாரன்ஸ் பேச்சால் வெடித்த சர்ச்சை! -
அவர்கள் தற்குறி அல்ல.. தவெகவின் அம்புக்குறி.. விஜய் ஆட்சி மீது பொறாமையால் விமர்சனம்.. லாரன்ஸ் பேட்டி -
அடுத்த 3 நாட்களில் ரூ.3,000 வரும்.. வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்! விஜய்யின் மெகா திட்டம்! -
திமுக ஆட்சியில் நடந்தது.. இப்போ தொடருது! விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுங்க! துரை வைகோ ஒரே போடு! -
பரந்தூர் திட்டம் கைவிடப்படுகிறதா? விமான நிலையத் திட்டத்தில் அதிரடி திருப்பம் - விஜய் புதிய வியூகம்!












Click it and Unblock the Notifications