கிரண் பேடிக்கு எதிரான போராட்டத்தை மீண்டும் முடுக்கி விடப் போகிறோம்.. நாராயணசாமி அரசு
Recommended Video

புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக கிராமங்கள் தோறும் போராட்டத்தை முடுக்கி விடப் போவதாக புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.
காங்கிரஸ் - திமுக கூட்டணியில் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்கொள்வது தொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் தனியார் ஓட்டலில் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர்கள், காங்கிரஸ், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் பேசியதாவது... மக்கள் நலத்திட்டங்களுக்கு தடையாக உள்ள கிரண்பேடியை கண்டித்து, தொடர்ச்சியாக 6 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தியும், ஆளும் அரசு முன்வைத்த கோரிக்கைகளை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நிறைவேற்றவில்லை.

ஆளுநருக்கு எதிராக புதுச்சேரி முழுவதும் கிராமங்கள் தோறும் மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்த இன்று நடைபெற்ற கூட்டத்தில் திட்டமிடப்பட்டது.

அதிமுக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு செய்த துரோகம். அது சந்தர்ப்பவாத கூட்டணி என்று நமச்சிவாயம் குற்றம்சாட்டினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications