பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியும் நாராயணசாமிக்கு கொரோனா.. தனிமைபடுதிக் கொண்டதாக ட்விட்டரில் தகவல்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியும் புதுச்சேரி முன்னாள் முதல்அமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

கொரோனா மூன்றாவது அலை தற்போது தொடங்கியுள்ள நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 1471 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் இன்று இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்ட நிலையில் ஆயிரத்து 213 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் பாதிப்பு

புதுச்சேரியில் பாதிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அடுத்தடுத்து இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சுகாதாரத்துறை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடும் கட்டுப்பாடுகள்

கடும் கட்டுப்பாடுகள்

இதனையடுத்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரி மாநில முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி தான் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் நாராயாணசாமி

முன்னாள் முதல்வர் நாராயாணசாமி

இதுகுறித்து நாராயணசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் லேசான நோய் அறிகுறிகள் இருந்ததால் ஒரு பரிசோதனை மேற்கொண்டதாகவும் அதில் தனக்கு ஒரு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் நாராயணசாமி அறிவுறுத்தியுள்ளார்.

பூஸ்டர் தடுப்பூசி

பூஸ்டர் தடுப்பூசி

இந்தியாவில் தற்போது முன் களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி போடப்பட்டு வரும் நிலையில் நாராயணசாமி கடந்த 13ஆம் தேதி பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதும் அதன் பிறகும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+