நீங்க வந்தா மட்டும் போதும்! நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் ரஜினிகாந்த்! ஆவலை சொன்ன அர்ஜுன் சம்பத்!
புதுச்சேரி : தமிழகத்தில் திராவிட மாய விலகி தேசியம் மலர்ந்திட நடிகர் ரஜினிகாந்த் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் பிரதமரின் திட்டங்கள் குறித்து பிரச்சார செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
தமிழக சினிமா உலகம் மட்டுமல்லாது இந்திய முழுவதும் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே அரசியலுக்கு வருவதாக அறிவித்து அவர் பின்வாங்கிய நிலையில் பலத்த விமர்சனங்களை சந்திக்க நேர்ந்தது. குறிப்பாக அவர் முன்னெடுத்த ஆன்மீக அரசியலுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அரசியல் வேண்டாம் என ஒதுங்கி விட்டார் ரஜினி.

நடிகர் ரஜினிகாந்த்
இதனால் அவரது ரசிகர்கள் பலத்தை ஏமாற்றத்தை சந்தித்த நிலையில் தற்போது வரை அவர் அரசியலுக்கு வர வேண்டும் என போஸ்டர்கள் மூலம் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் பல ரசிகர்கள் வேறு அரசியல் கட்சிகளில் சேர்ந்து தங்கள் அரசியல் எதிர்காலத்தை பலப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலையில் பாஜக நடிகர் ரஜினிகாந்தை தேர்தல் பிரச்சாரத்திலாவது ஈடுபட வைக்க வேண்டும் என விரும்புவதாக கூறப்படுகிறது. அதனை தற்போது வெளிப்படுத்தி இருக்கிறார் தீவிர பாஜக ஆதரவாளரும் இந்து மக்கள் கட்சி தலைவருமான அர்ஜுன் சம்பத்.

அர்ஜுன் சம்பத்
2024 ஆம் ஆண்டு தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் பிரதமரின் திட்டங்கள் குறித்து பிரச்சார செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி உயிரிழந்த காமாட்சி அம்மன் கோவில் வீதியில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மாலை அணிவித்து மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீட்டா போன்ற அமைப்புகள் மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியை பிரிக்க நினைத்த போது இந்து அமைப்புகள் சேர்ந்து மீட்டது. உயிரிழந்த யானை லட்சுமிக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டும். மணக்குள விநாயகர் கோவிலுக்கு லட்சுமியை போன்று ஒரு யானை தேவை

விசிக
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தன்னை மனநோயாளி என கருத்து தெரிவித்துள்ளார். பதிலுக்கு பதில் நாங்கள் பேசாமல் ஆன்மீக அரசியலை முன்னெடுத்து வருகிறோம். பிரிவினைவதாம், வன்முறை, மதமாற்ற சக்திகளுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி செயல்படுவதால் அக்கட்சியை தடை செய்ய வேண்டுமென ஆளுநர் மற்றும் முதல்வருக்கு மாவட்ட ஆட்சிகள் மூலம் மனு அளித்துள்ளோம்.

பிரச்சாரம்
ஆன்மீக அரசியல் கருத்துக்கள் தமிழகத்தில் மேன்மைபட வேண்டும் மேலும் தமிழகத்தில் திராவிடம் மாய விலகி தேசியம் மலர்ந்திட நடிகர் ரஜனிகாந்த் நேரடியாக அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும் 2024 தேர்தலில் பிரதமரின் திட்டங்கள் குறித்து பிரச்சார செய்ய வேண்டும். தமிழக அரசு பாரதிக்கு மதிப்பு அளிக்க வேண்டும். புதுச்சேரியில் பரம்பரை ஆட்சி தொடர வேண்டுமென நினைப்பதாகவும் புதுச்சேரி மக்கள் தேசியத்தின் பக்கம் உள்ளதால் திராவிட இயக்கங்களை ஏற்க மாட்டார்கள்" என்றார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications