என்ன டிவிட் இது.. நாராயணசாமியை கிண்டல் செய்த கிரண்பேடி.. நிறவெறி கருத்து?
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை கிண்டல் செய்யும் விதமான துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செய்த டிவிட் ஒன்று பெரிய சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.
Recommended Video

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை கிண்டல் செய்யும் விதமான துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செய்த டிவிட் ஒன்று பெரிய சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.
தொடர்ந்து 6வது நாளாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தர்ணா போராட்டம் செய்து வருகிறார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக இவர் போராடி வருகிறார்.
மாநில நலனின் வளர்ச்சிக்கு கிரண்பேடி எதிராக உள்ளார், மாநில நலனின் வளர்ச்சியை தடை செய்வதில் குறியாக உள்ளார் என்று நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து கிரண்பேடி தெரிவித்த கருத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
|
என்ன டிவிட்
முதல்வர் நாராயணசாமியின் போராட்டத்தை கிண்டல் செய்யும் விதமாக கிரண்பேடி டிவிட் ஒன்று செய்துள்ளார். அதில் ''என்னிடம் செய்தியாளர் ஒருவர் தர்ணாவும் ஒருவகை யோகாவா? என்று கேட்டார், நான் அவரிடம் 'ஆமாம், ஆனால் அது சூழ்நிலையை பொறுத்தது, நீங்கள் எதற்காக அமர்ந்துள்ளீர்கள், என்ன ஆசனம் செய்கிறீர்கள், என்ன சத்தம் எழுப்புகிறீர்கள் என்பதை பொறுத்தது' என்று கூறினேன்.'' என்று கிரண்பேடி டிவிட் செய்துள்ளார்.

பெரிய சர்ச்சை
இதுதான் தற்போது சர்ச்சை ஆகி இருக்கிறது. இதில் கிரண்பேடி இரண்டு காக்கைகள் புகைப்படத்தையும் பதிவேற்றி இருக்கிறார். அதன் கீழே காக்கைகளின் யோகா என்று எழுதி இருக்கிறார். நாராயணசாமியை கிண்டல் செய்யும் விதமாக அவர் இந்த புகைப்படத்தை பதிவேற்றி உள்ளார் என்று காங்கிரஸ் கட்சியினர் புகார் வைத்து வருகிறார்கள்.
|
என்ன மோசம்
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து சொல்லி வருகிறார்கள். இவர் ''என்ன இருந்தாலும் அகந்தை இருக்க கூடாது. அதுவும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒருவருக்கு எதிராக இப்படி பேச கூடாது. உங்களை போன்றவர்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை'' என்று இவர் கூறியுள்ளார்.
|
நிறவெறி கொள்கை
இவர் ''நிற ரீதியாக தமிழர்களை இழிவுப்படுத்தும் மரியாதைக்குரிய ஆளுநரின் செயல் வன்மையாக கண்டிக்கதக்கது '' என்று கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications