புதுவையில் 3 கட்டமாக உள்ளாட்சி தேர்தல்.. புதிய அட்டவணையை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான புதிய கால அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. நவம்பர் 02, 07, 13 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த கடந்த 22--ம் தேதி தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது. தொகுதி மறுசீரமைப்பில் குளறுபடிகள் உள்ளதாக இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

புதிய அட்டவணை
இந்த வழக்கு விசாரணையால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. மேலும் ஐந்து தினங்களுக்குள் புதிய கால அட்டவணையை வெளியிடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி புதிய தேர்தல் நடத்துவதற்கான கால அட்டவணையை புதுச்சேரி தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

மூன்று கட்டங்களாக தேர்தல்
அதன்படி வருகின்ற நவம்பர் மாதம் 02, 07, 13 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்தல் 02-11-2021 அன்று நடைபெற உள்ளது. 11-10-2021 அன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. 18-10-2021 அன்று வேட்புமனு தாக்கல் கடைசி நாளாகும். 20-10-2021 அன்று வேட்புமனு பரிசீலனை செய்யப்படும். 22-10-2021-க்குள் வேட்புமனுக்களை திரும்ப பெற வேண்டும்.

வேட்பு மனுத்தாக்கல்
இரண்டாம் கட்ட தேர்தல் 07-11-2021 அன்று நடைபெற உள்ளது. 15-10-2021 அன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 22-10-2021 ஆகும். வேட்புமனு பரிசீலனை 25-10-2021 அன்று நடைபெறும். 27-10-2021-க்குள் வேட்புமனுக்களை திரும்ப பெறுதல் வேண்டும். மூன்றாம் கட்ட தேர்தல் 13-11-2021 அன்று நடைபெற இருக்கிறது.

வாக்கு எண்ணிக்கை நாள்
வேட்பு மனுத்தாக்கல் தொடக்க நாள் 22-10-2021 ஆகும். கடைசி நாள் 29-10-2021 ஆகும். 02-11-2021-க்குள் வேட்புமனுக்களை திரும்ப பெறுதல் வேண்டும். மூன்று கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் 17-11-2021 அன்று நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நன்னடத்தை விதிமுறைகள்
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட இன்று முதல் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications