புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டி20 மேட்ச்சை டெஸ்ட் போட்டியாக மாற்றிய நாராயணசாமி.. விடாமல் பேசியதால்.. எதிர்க்கட்சியினர் டென்ஷன்!

Google Oneindia Tamil News

புதுவை: புதுவை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய முதல்வர் நாராயணசாமி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசியதால் எதிர்க்கட்சிகள் பொறுமை இழந்து கேட்கவும் முடியாமல், அமளி துமளியில் ஈடுபடவும் முடியாமல் நெளிந்தபடியே உட்கார்ந்திருந்தனர்.

புதுவையில் காங்கிரஸ், திமுக கூட்டணி எம்எல்ஏக்கள் 6 பேர் ராஜினாமா செய்ததை அடுத்து சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த துணை நிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டார். அதன்படி இன்று காலை சட்டசபை கூடியது.

புதுவையில் ஆட்சியை இழந்த ஆளும் காங். அரசு.. நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா புதுவையில் ஆட்சியை இழந்த ஆளும் காங். அரசு.. நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா

மத்திய அரசு

மத்திய அரசு

இந்த நிலையில் பேரவைக்கு வந்த முதல்வர் நாராயணசாமி மத்திய அரசை குற்றம்சாட்டி கடுமையாக விமர்சனம் செய்தார். வங்கிக் கணக்கில் ரூ 15 லட்சம் கருப்பு பணம் முதல் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வரை கடுமையாக விமர்சித்தார். மேலும் மத்திய அரசுக்கு கொடுக்கும் மானியத்தையும் மத்திய அரசு குறைத்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.

எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகள்

இது போல் தொடர்ந்து அவர் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசினார். இதனால் எதிர்க்கட்சிகள் டென்ஷன் ஆகி நாராயணசாமி தனது பேச்சை நிறுத்துமாறு கூறினர். அப்போது காங்கிரஸ் எம்எல்ஏக்கள்- எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எனினும் தொடர்ந்து நாராயணசாமி பேசினார்.

டெஸ்ட் போட்டி

டெஸ்ட் போட்டி

சுருக்கமாக சொல்வதென்றால் டி 20 போட்டிகளை டெஸ்ட் போட்டி போல் மாற்றினார். பொதுவாக இது போன்ற நேரங்களில் எதிர்க்கட்சியினர் அமளி துமளியில் ஈடுபடுவார்கள். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் போது முதல்வருக்கு நீண்ட நேரம் பேசி அவர் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூற உரிமை உள்ளது. இதனால் சட்டபடி முதல்வர் தனது பேச்சை முடிக்கும் வரை அனுமதி அளித்தாக வேண்டும் என்பதுதான் அவையின் மாண்பு.

எதிர்க்கட்சி

எதிர்க்கட்சி

இதனால் அமளியில் ஈடுபட முடியாமலும் நாராயணசாமியின் பேச்சை கேட்க முடியாமலும் எதிர்க்கட்சிகள் நெளிந்தபடி உட்கார்ந்திருந்தனர். பொதுவாக இது போன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு நேரங்களில் எதிர்க்கட்சி தலைமையை விமர்சித்து பேசி அவர்களை டென்ஷனாக்குவது ஒரு வித யுத்தி. அதை திறமையாக செய்து முடித்தார் நாராயணசாமி.

English summary
Narayansamy spoke in Trust vote for more than one hour which creates tension among opposition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X