வெங்கையா வருகை.. மத்திய போலீஸால் 20 மணி நேரம் சிறை வைக்கப்பட்ட மாணவர்கள்!
புதுச்சேரி: கல்வி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக பல்கலைக்கழக வளாகத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையால் பல்கலைக்கழக வளாகத்தில் சிறை வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கி வரும் மத்திய பல்கலைக்கழகத்தில் 60 க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர்களின் கல்வி கட்டணம் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவா்களுக்கு அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இலவசப் பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுவை பல்கலைக்கழக மாணவா்கள், பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திற்கு வெளியே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு இன்று கலந்துகொள்வதற்காக வருகை தந்துள்ளதால், நேற்றைய தினமே போராட்ட த்தில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் வலுகட்டாயமாக கைது செய்தனர்.

இந்நிலையில் இன்று பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்று வரும் நிலையில், 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக பல்கலைக்கழக வெள்ளி விழா ஆண்டு வளாகத்தில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையால் சிறை வைக்கப்பட்டனர்.

மேலும் சிறை வைக்கப்பட்ட மாணவர்கள் தங்களை நியாயமான முறையில் போராட்டம் நடத்த அனுமதிக்குமாறு, மத்திய ரிசர்வ் படை போலீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவியது.

-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications