மதுகடை திறப்பு...ஸ்டாலினுக்கு எதிராக புதுவையில் அதிமுக கருப்பு பலூன் பறக்கவிட்டு போராட்டம்
புதுச்சேரி: மதுக்கடைகள் திறப்பு விவகாரத்தில் மு.க.ஸ்டாலினின் இரட்டை நிலைப்பாட்டை கண்டித்து புதுச்சேரியில் அதிமுகவினர் கருப்பு பலூனை பறக்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளபோது தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது புதுச்சேரி மாநிலத்தல் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் அரசு இன்று முதல் மதுபானக் கடைகளை திறந்துள்ளதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதுபானக்கடைகளை திறக்கும் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டி புதுச்சேரியில் அதிமுகவினர் இன்று கருப்பு பலூனை பறக்க விட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மது விற்பனை கொள்கையில் இரட்டை வேடம் போடும் திமுக தலைவர் ஸ்டாலினை கண்டித்து புதுச்சேரி அதிமுக சார்பில் அதிமுக சட்டமன்ற கொறாடா வையாபுரி மணிகண்டன் தலைமையில் அதிமுகவினர் முத்தியால்பேட்டை பகுதியில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து அதிமுக சட்டமன்ற கொறடா வையாபுரி மணிகண்டன் கூறுகையில், தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்தபோது அதனை எதிர்த்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், தற்போது அவர்கள் ஆதரவுடன் புதுச்சேரியில் ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசு புதுச்சேரியில் மதுபான கடைகளை திறந்துள்ளதற்கு திமுக என்ன நடவடிக்கை எடுக்கபோகிறது என கேள்வி எழுப்பினார். உண்மையிலேயை மதுபான கடைகள் திறப்புக்கு திமுக எதிர்ப்பு தெரிவிப்பது என்றால் புதுச்சேரி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுமா எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும் மக்களுக்காக போராடுவதாக கூறி ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருவதாகவும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெவ்வேறு நிலைப்பாட்டை கொண்டுள்ள திமுக மதுபானக்கடை திறப்பு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதாகவும் குற்றம்சாட்டினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது.. அமைச்சர் வன்னியரசு பேட்டி












Click it and Unblock the Notifications