Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுகவின் வாய்.. சரியான பாடத்தைப் புகட்டுவோம்.. புகழேந்திக்கு அதிமுக கடும் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி : அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை கைது செய்ய வேண்டும் என கூறும் புகழேந்தி, திமுகவின் வாயாக இருந்துகொண்டு பேசுவதை நிறுத்திக் கொள்ளவில்லை என்றால், அவரது பாணியிலேயே அவருக்குப் புதுச்சேரி அதிமுக சரியான பாடத்தைப் புகட்டும் என்று புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் எச்சரித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, "தமிழக உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. ஒட்டுமொத்தமாக தோல்வியடைந்து விட்டது. அ.தி.மு.க.வை நினைக்கும்போது வேதனையாக உள்ளது.

சட்டசபை தேர்தலில் பழனிசாமி பிரசாரம் செய்து தோல்வியடைந்ததுபோல உள்ளாட்சி தேர்தலிலும் தோல்வியடைந்துள்ளது. பழனிசாமி கட்சியை விட்டு போனால்தான் அ.தி.மு.க.வை காப்பாற்ற முடியும்.

போராட்டம் வெடிக்கும்

போராட்டம் வெடிக்கும்

எடப்பாடி பழனிசாமியை நீக்காவிட்டால் தமிழகம் முழுவதும் தொண்டர்களின் போராட்டம் வெடிக்கும். அ.தி.மு.க.வுக்கு புதிய தலைமை வேண்டும். சசிகலாவை அரவணைத்து சேர்க்க வேண்டும். கொடநாடு கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். புதுவையில் அ.தி.மு.க. ஜீரோவுக்கு வந்துவிட்டது. இதே நிலை தமிழகத்துக்கும் வரும்" இவ்வாறு புகழேந்தி கூறினார்.

கடும் கண்டனம்

கடும் கண்டனம்

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி வெற்றி பெற்ற திமுக, அதிமுகவைக் குறைத்துப் பேசிவருவது கண்டிக்கத்தக்கது. சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்து உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இருக்கின்றனவா? என்கிற விதத்தில் பேசியுள்ளார்.

1991 ஞாபகம் உள்ளதா

1991 ஞாபகம் உள்ளதா

1991-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியில் இருந்த திமுக முற்றிலும் முழமையாகத் தோல்வியடைந்து திமுக தலைவர் கருணாநிதி துறைமுகம் தொகுதியிலும், பரிதி இளம்வழுதி எழும்பூர் தொகுதியிலும் மட்டும் வெற்றி பெற்றதை மறந்துவிட்டு திமுக இன்று வீண் ஆர்ப்பாட்ட அரசியலை நடத்துகிறது.

2024 தேர்தல்

2024 தேர்தல்

தற்போது நாடாளுமன்றம், சட்டப்பேரவை, உள்ளாட்சி நிர்வாகம் மூன்றிலும் என அதிகாரத்தில் உள்ள திமுகவை 2024-ல் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக படுதோல்வியைச் சந்திக்கும் நிலையை நிச்சயம் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும், தொண்டர்களும் நிறைவேற்றுவார்கள்.

தலைமறைவு

தலைமறைவு

கர்நாடக மாநில அதிமுக செயலாளராக இருந்த புகழேந்தி அங்கு அதிமுகவை வீணாக்கிவிட்டு, பல்வேறு தவறுகள் செய்து, இருந்த கட்சிக்கெல்லாம் துரோகம் செய்து தற்போது தலைமறைவாக ஜெயலலிதா பெயரைச் சொல்லி தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாழ்ந்து வருகிறார்.

திமுகவின் வாய்

திமுகவின் வாய்


புதுச்சேரியில் அதிமுக வலிமையாகவும், விவேகமாகவும், சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இணை ஒருங்கிணைப்பாளரைக் கைது செய்ய வேண்டும் என கூறும் புகழேந்தி, திமுகவின் வாயாக இருந்துகொண்டு பேசுவதை நிறுத்திக் கொள்ளவில்லை என்றால், அவரது பாணியிலேயே அவருக்குப் புதுச்சேரி அதிமுக சரியான பாடத்தைப் புகட்டும்.'' இவ்வாறு அன்பழகன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+