அதெப்படி பாஜக தலைமையில் ஆட்சி? அமித்ஷா பேச்சால் அதிருப்தி- கூட்டணியில் இருந்து விலகும் என்.ஆர்.காங்.
புதுச்சேரி: புதுச்சேரி அரசியலில் புதிய திருப்பமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து என்.ஆர். காங்கிரஸ் விலக முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video

புதுச்சேரியில் திமுக- காங்கிரஸ்; என்.ஆர்.காங்கிரஸ்- அதிமுக- பாஜக கூட்டணிகள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் சட்டசபை தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என்கிற நிலை இருந்து வந்தது.

புதுச்சேரி பாஜக
இந்த நிலையில் புதுச்சேரியில் முதல்வராக இருந்த நாராயணசாமி ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ஆட்சியை கவிழ்த்த காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏக்களாக இருந்தவர் அடுத்தடுத்து பாஜகவில் ஐக்கியமாகிவிட்டனர்.

அமித்ஷா திட்டவட்டம்
இதனிடையே காரைக்காலில் 2 நாட்களுக்கு முன்னர் பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். அப்போது பேசிய அமித்ஷா, புதுச்சேரி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையில்தான் ஆட்சி அமையும் என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

என்.ஆர். காங். அதிருப்தி
புதுச்சேரியைப் பொறுத்தவரை பிற மாநிலங்களைப் போல காங்கிரஸ் கட்சித் தலைவர்களை கபளீகரம் செய்துதான் கட்சியை உருவாக்கி வைத்திருக்கிறது பாஜக. அப்படியான நிலையில் பாஜக தலைமையில் புதிய அரசு அமையும் என அமித்ஷா பேசியிருக்கிறார். இது என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை கடுமையாக அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாம்.

கூட்டணியில் இருந்து விலகல்?
ஆட்சி கவிழ்ப்புக்கு உறுதுணையாக இருந்த நம்மை கழற்றிவிட்டு பாஜக தலைமையில் ஆட்சி அமையும் என அமித்ஷா பேசியிருக்கக் கூடாது என்பது என்.ஆர். காங். நிலைப்பாடு. இந்த அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து என்.ஆர். காங்கிரஸ் விலகுவது என முடிவு எடுத்துள்ளதாம். இதனால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications