இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப் பரப்பின்.. உறுதிமொழி எடுத்த என்.ஆர். காங், பா.ஜக. அமைச்சர்கள்
புதுச்சேரி: புதுச்சேரியில் அமைச்சர்களுக்கு பதவியேற்பு செய்து வைத்து துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுநந்திரராஜன் வாசித்த உறுதி மொழியில் 'இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப் பரப்பின் அமைச்சர் என்ற முறையில்' என்ற வரிகள் இடம்பெற்றிருந்தன.
புதுச்சேரியில் 55 நாட்கள் இழுபறிக்குப் பின்னர் இன்றுதான் அமைச்சரவை பதவியேற்றது. என்.ஆர். காங்கிரஸின் 3 அமைச்சர்களும் பாஜகவின் 2 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
புதுச்சேரியில் இன்று பிற்பகலில் நடைபெற்ற விழாவில் 5 அமைச்சர்களுக்கும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். கடவுள் மீது ஆணையாக என்ற உறுதிமொழியை முழுமையாக தமிழிசை வாசிக்க் பதவியேற்ற அமைச்சர்களும் அதையே வாசித்தனர்.

பதவியேற்பில் உச்சரித்த இந்திய ஒன்றியம்
பதவியேற்பு உறுதி மொழியில், 'இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப் பரப்பின் அமைச்சர் என்ற முறையில்' என்கிற வரியும் இடம்பெற்றிருந்தது. இதனையும் தமிழிசை சவுந்திரராஜன் வாசித்தார். பதவியேற்ற போது பாஜக அமைச்சர்கள் இந்திய ஒன்றியம் என்ற சொல்லை உச்சரிக்க தடுமாறினர்.

முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
தமிழகத்தில் ஆளும் திமுக அரசு மத்திய அரசை ஒன்றிய அரசு என்றுதான் அழைப்போம் என்பதி உறுதியாக உள்ளது. தமிழக சட்டசபையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசு என்பதில் கூடாட்சித் தத்துவம் இருக்கிறது; ஒன்றிய சொல்லை பயன்படுத்தினோம்; பயன்படுத்துகிறோம்- பயன்படுத்துவோம் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமிழக பாஜக கடும் எதிர்ப்பு
ஆனால் தமிழக பா.ஜ.க.வினரோ ஒன்றிய அரசு என அழைக்கக் கூடாது என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அப்படி ஒன்றிய அரசு என அழைத்தால் தேவைப்பட்டால் வழக்கு தொடருவோம் என்றும் எச்சரித்துள்ளனர். மத்திய அரசு ஒன்றிய அரசு என்றால் தமிழக அரசு பஞ்சாயத்து அரசா என்றும் கிண்டலடித்து வருகின்றனர்.

இந்திய ஒன்றியம் வார்த்தையுடன் பாஜக பதவியேற்பு
இந்த நிலையில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அமைச்சரவை பதவியேற்பில் துணை நிலை ஆளுநரான பாஜகவை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் வாசித்த பதவியேற்பு உறுதி மொழியிலேயே இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப் பரப்பின் அமைச்சர் என்ற முறையில் என்கிற வரிகள் இடம்பெற்றுள்ளது. இந்த உறுதிமொழியை வாசித்துதான் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அமைச்சரவையே பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications