Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேசிய கல்வி கொள்கையில் இணையும் புதுச்சேரி..சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மாற கல்வித்துறை உத்தரவு

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: அரசுப்பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டு முதல் தமிழக பாடத்திட்டத்துக்குப் பதிலாக சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாகும் என புதுச்சேரி அரசு முடிவு எடுத்துள்ளது. சிபிஎஸ்இ இணைப்புக்கு அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் விண்ணப்பிக்க கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்புவரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும், மாணவர்களுக்கு ரூ.1 சிறப்பு பேருந்து இனி இலவசமாக இயக்கப்படும் என்று கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டசபையில் அறிவித்தார்.

Puducherry to join National Education Policy Education Department orders to switch to CBSE syllabus

புதுச்சேரி சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பின்னர் பேசிய நமச்சிவாயம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். தற்போது மாணவர்கள் ரூ.1 கட்டணத்தில் பயணிக்கும் சிறப்பு பேருந்து சேவை இனி இலவசமாக இயக்கப்படும் என்று கூறினார்.

புதுச்சேரியில் கல்வி, விளையாட்டு தரத்தை உயர்த்த தேசிய கல்விக் கொள்கை 2020 உடன் இணைந்த வகையில் அடுத்த 10 ஆண்டுகளில் உயர்த்துவதற்கு விஷன் பிளான் 2032 உருவாக்கப்படும். மேலும் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் வித்யா சமிக்ஷா சேந்திரங்கள் உருவாக்கப்படும் என்று நமச்சிவாயம் தெரிவித்தார்.

புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக பாடத் திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாஹேயில் கேரள பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டில் என்ஆர்காங்கிரஸ் அரசு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது.

2014-15ஆம் கல்வி ஆண்டு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒவ்வொரு வகுப்பாக சிபிஎஸ்இ, பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. கடந்த 2018-19 கல்வி ஆண்டில் 5ம் வகுப்பிற்கும் சிபிஎஸ்இ, பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. 6-ம் வகுப்பில் இருந்து சிபிஎஸ்இ, பாடத் திட்டம் விரிவாக்கப்படவில்லை.

இதனால், 5ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ, பாடத்திட்டத்தில் படித்து வந்த மாணவர்கள் வேறு வழியின்றி 6ஆம் வகுப்பில் இருந்து தமிழக பாடத் திட்டத்தை படித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போதைய அரசு, 6ஆம் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரைக்கும் சிபிஎஸ்இ, பாடத்திட்டத்தை அமல்படுத்த ஆலோசனை நடத்தி வந்தது.

இந்த நிலையில், மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே கல்வி முறையான புதிய கல்விக் கொள்கை திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. புதுச்சேரியிலும் புதியக் கல்விக்கொள்கை அமலாகவுள்ளது. ஆனால் தமிழக அரசு புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக உள்ளது. இதனால், மத்திய அரசின் சிபிஎஸ்இ, பாடத்திட்டத்தை 6ஆம் வகுப்பில் இருந்து விரிவாக்கம் செய்ய புதுவை அரசு முடிவு செய்துள்ளது.

அதனையொட்டி, இந்த கல்வி ஆண்டில் 6ஆம் வகுப்பில் சிபிஎஸ்இ, பாடத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான அனுமதி கேட்டு, புதுவை பள்ளிக் கல்வித்துறை சார்பில், மத்திய இடைநிலை கல்வி வாரியத்திற்கு விண்ணப்பித்தது. குஜராத்தில் கடந்த 2 நாட்கள் நடைபெற்ற புதிய கல்விக் கொள்கை குறித்த அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற புதுவை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், மாநிலத்தில் சிபிஎஸ்இ, பாடத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார்.

இந்த நிலையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் சேர புதுச்சேரியில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் என்று கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. மேலும் சிபிஎஸ்இ பள்ளிகளாக தரம் உயர்த்த தேவையான ஆவணங்களை பள்ளிகள் நாளைக்குள் சமர்பிக்க வேண்டும் என்றும் கல்வித்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+