புதுவை தட்டாஞ்சாவடியை தட்டி தூக்கிய முதல்வர் ரங்கசாமி! காங்கிரஸ் வைத்திலிங்கம் படு தோல்வி
புதுச்சேரி: புதுவையில் தற்போது முதல்வராக இருக்கும் ரங்கசாமி மீண்டும் ஆட்சியமைக்க உள்ளார். தட்டாஞ்சாவடி தொகுதியில் 4,441 வாக்குகள் வித்தியசத்தில் ரங்கசாமி வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்வரும், எம்பியுமான வைத்திலிங்கத்தை வீழ்த்தி ரங்கசாமி வெற்றி பெற்றுள்ளார்.
தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரு தொகுதிகளில் புதுவை முதல்வர் ரங்கசாமி போட்டியிட்டார். கடந்த முறை தட்டாஞ்சாவடியில் வெற்றி பெற்ற ரங்கசாமி இந்த முறையும் வெற்றி பெறுவரா? அல்லது காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெறுவாரா? என்ற கேள்வி எழுந்து இருந்தது. தொடக்கம் முதலே முன்னிலை வகித்த ரங்கசாமி தற்போது வெற்றி பெற்றுள்ளார்.
புதுவை சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. புதுவையில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. இங்கு பெரும்பான்மைக்கு 16 இடங்களில் வெல்வது அவசியம். புதுவையை பொறுத்தவரை தற்போது முதல்வராக இருக்கும் ரங்கசாமி கடந்த முறையை போலவே இரண்டு தொகுதிகளில் களம் இறங்கினார்.

போன முறை ஏனாம் தொகுதியில் போட்டியிட்டு சுயேச்சை வேட்பாளரிடம் தோல்வியை தழுவியதால், இந்த முறை புதுவை தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். தட்டாஞ்சாவடியில் புதுவையில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக முதல்வர் வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் வைத்திலிங்கம் களம் கண்டார். இதனால் இந்த தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது.
தட்டாஞ்சாவடி தொகுதியில் கடந்த முறை ரங்கசாமி வெற்றி பெற்று இருந்தார். ஆனால் ஏனாம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் சீனிவாசனிடம் தோல்வி அடைந்தார்.
இந்த முறை தட்டாஞ்சாவடி தொகுதியில் 87.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த தொகுதியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ரங்கசாமி, வைத்திலிங்கம் ஆகிய இருவரும் இருந்ததால் இந்ததொகுதியில் வெற்றி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு புதுவையில் ஏற்பட்டு இருந்தது.
தட்டாஞ்சாவடி தொகுதியில் நாம் தழிழர் கட்சி சார்பில் கார்த்தி குமாரி, பாமக சார்பாக கதிரேசன், தவெக கூட்டணியில் உள்ள நேமக கட்சி சார்பில் விநாயகம் ஆகியோர் போட்டியிட்டனர்.
ரங்கசாமி தட்டாஞ்சாவடி மட்டுமின்றி மங்கலம் தொகுதியிலும் போட்டியிட்டுள்ளார். மங்கலம் தொகுதியில் என்.ஆர் காங்கிரஸ் சார்பில் ரங்கசாமியும் காங்கிரஸ் சார்பாக ரகுபதியும் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் திமுக சார்பாக ரங்கன் போட்டியிட்டார். தவெக சார்பாக சத்யா போட்டியிட்டார். புதுவையை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. பெரும்பாலான கருத்துகணிப்புகள் இதனையே கூறின.














Click it and Unblock the Notifications