TVK Vijay: திமுகவை நம்பக் கூடாது.. நம்பவைத்து ஏமாற்றுவது தான் திமுக வேலை - பொங்கிய விஜய்
புதுச்சேரி: கரூர் சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக பொதுவெளியில் தவெக தலைவர் விஜயின் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், புதுச்சேரி மக்கள் திமுகவை நம்பக் கூடாது, மக்களை நம்ப வைத்து ஏமாற்றுவது தான் திமுக வேலை என்றும், புதுச்சேரியில் வளர்ச்சிக்கு மத்திய அரசு துணை நிற்கவில்லை, புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்றும் விஜய் பேசினார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் கரூர் பொதுக் கூட்டத்தில் கூட்ட நெரிசல் சிக்கி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை அடுத்து விஜய் எந்தவொரு பொதுக் கூட்டத்தையும் நடத்தவில்லை. விஜய் மக்கள் சந்திப்புக்காக சேலத்தில் அனுமதி கேட்டிருந்த நிலையில், அங்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, புதுச்சேரியில் மக்கள் பிரசாரம் மேற்கொள்ள தவெக சார்பில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. புதுச்சேரியில் விரிவான சாலை வசதிகள் இல்லாததாலும், மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதி என்பதாலும் விஜயின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அம்மாநிலத்தின் புஸ்ஸி ஆனந்தை பலமுறை சந்தித்துப் பேசியும் அனுமதி மறுக்கப்பட்டது. மாறாக பொதுக் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.
அந்த வகையில், புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக் கூட்டம் இன்று நடைபெற்றது. ஹெலிபேடு மைதானத்திற்கு வரும் விஜய் பிரசார வேனில் நின்றபடி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது நெஞ்சில் குடியிருக்கும் என்று கூறி உரையைத் தொடங்கிய விஜய் பேசுகையில், ஒன்றிய அரசுதான் தமிழகம் ஒரு மாநிலம், புதுச்சேரி ஒரு தனி யூனியன் பிரதேசம் என பிரித்து பார்க்கிறது. புதுச்சேரியும் தமிழகமும் ஒன்றுதான். வேறு வேறு ஊரில் வேறு வேறு வீட்டில், வேறு வேறு மாநிலங்களில் இருந்தாலும் நாமெல்லாம் ஒன்றுதான். நாம் எல்லாம் சொந்தம் தான்.
தமிழ்நாடும், புதுச்சேரியும் தனித்தனியாக இருந்தாலும் நாம் ஒன்றுதான். தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா என உலகின் மூளையில் எங்கு நம் வகையறா இருந்தாலும் நம் உயிர் தான். புதுச்சேரி என்றாலே நியாபகத்துக்கு வருவது மணக்குள விநாயகர், அரவிந்தர் ஆசிரிமம், வில்லியனூர் மாதா தான். மாகாகவி பாரதியார் இருந்த மண், பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த மண் என பல்வேறு பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
1970 இல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சியமைத்தார். அதற்கு முன்பே 1974 இல் எம்ஜிஆர் ஆட்சி அமைந்தது. அதனால் தான் நமக்காக வந்தவர் எம்ஜிஆர், அவரை நீங்கள் மிஸ் பண்ணீடாதீங்க என்று அலர்ட் செய்தவர்களே புதுச்சேரிதான். தமிழ்நாடு போல புதுச்சேரி மக்களும் 30 வருடமாக என்னை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். புதுச்சேரி மக்களுக்கும் சேர்ந்து குரல் கொடுப்பது எனது கடமை.
தமிழ்நாட்டில் இருக்கும் திமுக அரசு மாதிரி இல்லை புதுச்சேரி அரசு. வேறு ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும் தன்னெழுச்சியாக வரும் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது இந்த அரசு. புதுச்சேரி முதல்வருக்கு மனப்பூர்வமான நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன். இதைப் பார்த்தாவது திமுக அரசு கற்றுக் கொண்டால் பரவாயில்லை.
வரும் தேர்தலில் 100 சதவீதம் திமுகவினர் கற்றுக் கொள்வார்கள். புதுச்சேரியில் வளர்ச்சிக்கு மத்திய அரசு துணை நிற்கவில்லை. புதுச்சேரியின் மாநில அந்தஸ்து கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும். இங்கு ஐடி நிறுவனம் உருவாக வேண்டும் என்கிற எண்ணே அவர்களுக்கு இல்லை. இங்கு ஒரு அமைச்சரை நியமித்து 200 நாளாகிவிட்டது. ஆனால், அவருக்கு இலாகாவே கொடுக்கவில்லை.
புதுச்சேரி மக்களுக்கு சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். புதுச்சேரி மக்கள் திமுகவை நம்பவே கூடாது. மக்களை நம்ப வைத்து ஏமாற்றுவது தான் திமுக வேலை. தமிழ்நாட்டை ஒதுக்குவது போல புதுச்சேரியையும் ஒதுக்கி விடக் கூடாது.
20 லட்சம் பேர் வாழக்கூடிய யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மத்திய நிதிக் குழுவில் இடம்பெறவில்லை. மாநிலங்களுக்கான நிதி பகிர்தல் அடிப்படையில் புதுச்சேரிக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை. தோராயமாகவே ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு விடுவிக்கிறது என்று பேசினார்.
-
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
அரசியல் சதுரங்கத்தில் சறுக்கிய விஜயதாரணி! ‘அமைச்சர்’ வாய்ப்பை கோட்டை விட்டாரா விளவங்கோடு சிங்கப்பெண் -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன? -
பிரசாதங்களை கோவில்களிலேயே தயாரிக்க வேண்டும்.. 3 மாதம் கெடு.. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு! -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
அடிச்சு தூக்க போகுது தமிழக பாஜக.. இப்படியொரு சடன் மாற்றம்? இங்கே திமுக, அங்கே தவெக! தாங்குமா தாமரை? -
717 டாஸ்மாக் கடைகள் மூடியாச்சா இல்லையா? RTI பதிலால் அதிர்ச்சி.. உடனே பாய்ந்து வந்த பாஜக! -
கம்ப்ளைன்ட் கொடுக்க போன என் மீதே கேஸ் போட்டுட்டாங்க.. பிளான் பண்ணி பண்ணுறாங்க! ஜூலி ஆதங்கம் -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி!












Click it and Unblock the Notifications