புதுக்கோட்டை தோட்டத்தில் புகுந்த 5 அடி நீள ராட்சத சாரைப்பாம்பு.. திருவள்ளூர் பள்ளியிலும் பாம்பு?
புதுக்கோட்டை: தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே பல்வேறு இடங்களில் பாம்புகள் குடியிருப்பு மற்றும் கல்வி நிறுவனங்களுக்குள் புகுந்த சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால், குளிர்ச்சியான இடங்களைத் தேடி பாம்புகள் மனித நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு வரத் தொடங்கியுள்ளன. அந்தவகையில் நேற்றைய தினம் திருவள்ளூர், புதுக்கோட்டை பகுதிகளில் அடுத்தடுத்து நிகழ்ந்த இச்சம்பவங்கள் வனத்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் பெரும் சவாலாக அமைந்துவிட்டன.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில் நேற்று முன்தினம் வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது திடீரென ஒரு பாம்பு உள்ளே நுழைந்தது.
வகுப்பறையில் பாடம் கவனித்துக் கொண்டிருந்த மாணவர்கள் தங்களுக்கு மிக அருகில் பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். பயத்தில் மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு வகுப்பறையை விட்டு வெளியே ஓடினார்கள்..

அரசு பள்ளியில் பாம்புகள்
ஆசிரியர்கள் உடனடியாக மாணவர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்திவிட்டு தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த மீட்புக் குழுவினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அந்தப் பாம்பைப் பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பும், அச்சமும் ஏற்பட்டது..
முன்பெல்லாம் குடியிருப்பு பகுதிகளுக்குள் பாம்புகள் வந்த நிலையில், பள்ளி வளாகத்தில் பாம்புகள் வருவது பெற்றோர்களை அச்சத்துக்குள்ளாக்கி வருகிறது.. கடந்த வாரம் நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு பள்ளியிலும் அடுத்தடுத்து பாம்புகள் பிடிபட்டது நினைவிருக்கலாம்.. பள்ளி வளாகத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை இதுபோன்ற சம்பவங்கள் வலியுறுத்துவதாக உள்ளன..
புதுக்கோட்டை தோட்டத்தில் பாம்பு
அதேபோல தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்றைய தினம் சாரைப்பாம்பால் அங்குள்ளவர்கள் பீதி அடைந்துவிட்டனர்.. தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை பகுதியில் உள்ள நம்பிக்கைமீண்டான் கிராமம் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன்..
இவரது வீட்டை சுற்றி பெரிய தோட்டம் உள்ளது.. வீட்டில் இருந்தவர்கள் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, புதர்களுக்கு இடையே ஏதோ அசைவதைக் கண்டு உற்றுப் பார்த்துள்ளார்..
பிறகுதான் செடிகள் நடுவே சுமார் 5 அடி நீளமான நல்ல பாம்பு ஒன்று சுருண்டு கிடப்பதை கவனித்தார் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தரவும் அவர்கள் விரைந்து வந்தனர்.. சில மணி நேர போராட்டத்துக்கு பிறகு, லாவகமாக பாம்பை பிடித்து வனப்பகுதியில் பத்திரமாக விட்டுவிட கொண்டு சென்றனர்..
வனத்துறை அறிவுரை
நகர்ப்புற விரிவாக்கத்தினால் பாம்புகளின் வாழ்விடங்கள் சுருங்கி வருவதே இது போன்ற ஊடுருவல்களுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. மக்கள் தங்கள் வீட்டுச் சுற்றுப்புறத்தைப் புதர்கள் இன்றிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்திவிட்டு சென்றனர்...
எப்போதுமே பாம்பைக் கண்டால் பயப்படாமல் அமைதியாக இருந்து, பாதுகாப்பான தொலைவிற்கு அதாவது குறைந்தது 3 மீட்டர் விலகிச் செல்ல வேண்டும் என்றும் பாம்பை அடிக்கவோ, பிடிக்கவோ முயற்சிக்காமல், அது வெளியேறும் வரை காத்திருக்க வேண்டும என்றும் போலீசார் அறிவுறுத்துகிறார்கள்..
ஒருவேளை வீட்டுக்குள் பாம்பிகடள இருந்தால், குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி, தீயணைப்புத் துறை அல்லது வனத்துறையினருக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்..












Click it and Unblock the Notifications