”தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் பரவல்.. அரசு மறைக்கிறது” எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.
புதுக்கோட்டையில் கவிஞர் கண்ணதாசன் சாரல் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பல்வேறு சாதனை படைத்த நபர்களுக்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விருதுகளை வழங்கி பாராட்டினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் எச்1 என்1 என்ற பன்றிக் காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை தமிழக அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் மறைப்பது வேதனைக்குரியது.

பன்றி காய்ச்சல் பரவல்
பன்றி காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் கவனமாக இருக்க வேண்டும். வேகமாக பரவக்கூடிய காய்ச்சலில் பன்றி காய்ச்சலும் ஒன்று விழிப்புணர்வோடு பொதுமக்கள் இருக்க வேண்டும். சென்னை எழும்பூர் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் காய்ச்சலால் அதிகளவு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருகின்றனர். அவர்களை சிகிச்சை பெறுவதற்கு உண்டான படுக்கை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதுதவிர டெங்கு, இன்ஃப்ளூயன்சா உள்ளிட்ட பல்வேறு காய்ச்சலும் பரவி வருகிறது.

மருந்து தட்டுப்பாடு
தொடர்ந்து மருந்து தட்டுப்பாடு குறித்து பேசிய அவர், தமிழகத்தில் மருந்து மற்றும் மாத்திரைகள் தட்டுப்பாடு உள்ளது என்பதை பொதுமக்கள் மட்டுமல்ல மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்களே குற்றம்சாட்டி வருகின்றனர். அமைச்சர் இதனை மறுப்பதை விடுத்து மக்கள் நலன், குழந்தைகள் நலன் கருதி உடனடியாக மருந்து மாத்திரைகள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

விடுமுறை தீர்வு அல்ல
அதேபோல் அதிக காய்ச்சல் ஏற்பட்டு வருவதால் புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் விடுமுறை விட வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறி வருகிறார். அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால் அக்கறையோடு அணுக வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. விடுமுறை என்பது தீர்வு அல்ல. காய்ச்சல் பரவுவதை பொறுத்து முடிவு செய்யலாம் . உடனடியாக அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளிலும் காய்ச்சல் வார்டு உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

மர்ம காய்ச்சல்
அதேபோல் மர்ம காய்ச்சல் என்று ஒரே வார்த்தையில் கூறி முடித்து விட முடியாது. நான் மருத்துவ துறை அமைச்சராக இருந்தபோது இதுபோன்ற பல்வேறு சவால்களை சந்தித்து சீர் செய்துள்ளேன். கடந்த அதிமுக ஆட்சியில் எட்டு ஆண்டு காலத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்களை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்துள்ளோம். அதேபோல் தற்போதும் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications