புதுக்கோட்டையில் கொடுமை.. அரசு பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட பழங்குடியின மாணவிகள்.. 8 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே பள்ளிக்கு செல்வதற்காக அரசுப் பேருந்தில் ஏறிய பழங்குடியின மாணவிகளை நடத்துநர் தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட மாணவிகள் 8 பேர் காயம் அடைந்த நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை அருகே உள்ள ரெங்கம்மாள் சத்திரத்திரத்தில் இருந்து 11க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவிகள், பள்ளிகளுக்கு வருவதற்காக அங்கு வந்த நகரப் பேருந்தில் ஏறி இருக்கின்றனர். பேருந்து சற்று தொலைவு சென்றதும் கூட்டம் அதிகமாக இருப்பதாக கூறி, அந்தப் பகுதியில் இருந்து ஏறிய மாணவிகளை நடத்துநர் கீழே இறங்க சொன்னதாக கூறப்படுகிறது.

School girls Conductor Caste Discrimination

அவர்கள் இறங்க மறுத்த போது கதவை திறந்துவிட்டிருக்கின்றனர். அப்போது மாணவிகள் கீழே விழுந்துவிட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவிகள் தரப்பில், ஒரு மாணவியை நடத்துநர் தள்ளிவிட்டார். அதன்பின் பேருந்தில் நின்றிருந்த 11 மாணவிகளும் அடுத்தடுத்து கீழே விழுந்திருக்கின்றனர். இதில் 8 மாணவிகள் காயம் அடைந்துள்ளனர்.

அப்போது மாணவிகள் கண்ணீருடன் கதறிய போது அங்கிருந்த சமூக ஆர்வலர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு அழைத்திருக்கின்றனர். பின்னர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவிகளுக்கு கால், தலை, கை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டிருக்கிறது.

கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், நடத்துவர் அத்துமீறி தங்களை தள்ளிவிட்டதாகவே மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர். புதுக்கோட்டை - திருச்சி நெடுஞ்சாலையில் இருக்கும் ரெங்கம்மாள்சத்திரம் பகுதியில் பழங்குடி சமூகத்தினர் அதிகமாக வசிக்கின்றனர். முதல் தலைமுறையாக பள்ளிகளுக்கு செல்லும் முதல் தலைமுறை மாணவிகளுக்கு இந்த கொடுமை அரங்கேறி இருக்கிறது.

பழங்குடியின மாணவிகள் என்பதால், அந்த பேருந்து நடத்துநரிடம் சிலர் அந்த மாணவிகளை கீழே இறக்கிவிடக் கூறியதாகவே சொல்லப்படுகிறது. அதன்படியில் தான் பேருந்து மெதுவாக செல்லும் போது கதவை திறந்துவிட்டிருக்கிறார். மாணவிகள் கீழே விழுந்த போது பின்னால் ஒரு வாகனம் வந்திருக்கிறது. ஒருவேளை அந்த வாகனம் மாணவிகள் மீது ஏறி விபத்து ஏற்பட்டிருந்தால், மிகப்பெரிய அசம்பாவிதம் நடத்திருக்கும்.

இதனை கண்டித்து திருச்சி - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் காயம் அடைந்த மாணவிகள் அழுகுரல் பார்ப்போரை கலங்கடிக்க செய்கிறது. இதனால் சம்மந்தப்பட்ட நடத்துநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+