Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு? - அமைச்சர் ரகுபதி சொன்ன பதில்! லகான் முதல்வர் ஸ்டாலின் கையில்!

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்வது குறித்து உள்துறை முடிவு செய்யும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணைக்காக அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் பரிந்துரைப்படி, துப்பாக்கிச்சூட்டில் சம்பந்தப்பட்ட டிஎஸ்பி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், வட்டாட்சியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் அடுத்தகட்டமாக காவல்துறை உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

போலீசாரிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் இன்னும் பல மேலிட புள்ளிகளின் தலைகளும் உருளக்கூடும் எனக் கூறப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு - அதிர்ச்சி

துப்பாக்கிச்சூடு - அதிர்ச்சி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட அருணா கெஜதீசன் ஆணையத்தின் அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் தீ வைக்கப்படுவதற்கு முன்பே அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது, மக்கள் தப்பி ஓடும்போதும் அவர்களை போலீசார் குறிவைத்து சுட்டுக் கொன்றுள்ளனர் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி 'டிவியை பார்த்துதான் துப்பாக்கிச்சூடு பற்றி தெரிந்துகொண்டேன்' எனக் கூறியதும் பொய் என அம்பலப்படுத்தியிருக்கிறது இந்த அறிக்கை.

தமிழக அரசு ஆலோசனை

தமிழக அரசு ஆலோசனை

இந்நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் திருமலை, சுடலைக்கண்ணு, சங்கர், சதீஷ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், வட்டாட்சியர்கள் சந்திரன், சேகர், கண்ணன் ஆகிய மூன்று பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அப்போதைய தூத்துக்குடி டிஎஸ்பி லிங்கத் திருமாறனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அடுத்தகட்டமாக

அடுத்தகட்டமாக

அடுத்தகட்டமாக, போலீஸ் உயரதிகாரிகள் மற்றும், அரசுத்துறை உயரதிகாரிகள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் பொய் கூறியிருப்பதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளதால், அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் கமிட்டியின் ரிப்போர்ட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது.

உள்துறை முடிவு செய்யும்

உள்துறை முடிவு செய்யும்

அதற்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை அறிக்கையின்படி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்குப்பதிவு செய்வது குறித்து உள்துறை தான் முடிவு செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் கையில்

ஸ்டாலின் கையில்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கையில் தான் உள்துறை இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுப்பது பற்றி உள்துறையே முடிவு செய்யும் என சட்டத்துறை அமைச்சர் கூறியிருப்பதன் மூலம், ஸ்டாலின், இதுகுறித்த ஆலோசனையில் இறங்கி இருப்பது தெளிவாகிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+