வெண்டைக்காய், எலுமிச்சை பழம்.. 'ஆ.ராசாவுக்கு ஒரு பார்சல் போடே'.. தினுசாக யோசிக்கும் பாஜகவினர்
புதுக்கோட்டை: மனு தர்மம் குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பாஜகவினர், அவருக்கு வெண்டைக்காய்கள், எலுமிச்சைப் பழங்கள் அடங்கிய பார்சலை தபால் மூலமாக அனுப்பி வருகின்றனர்.
திமுக எம்.பி ஆ.ராசா சமீபத்தில் இந்துக்கள் - சூத்திரர்கள் தொடர்பாக மனு தர்மத்தைச் சுட்டிக்காட்டி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மனு தர்மத்தை ஆ.ராசா அவமதித்துவிட்டதாக கூறி பாஜகவினரும், இந்து அமைப்பினரும் தமிழகம் முழுவதும் போராட்டத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

என்ன பேசினார்?
சமீபத்தில் திராவிடர் கழக நிகழ்ச்சி ஒன்றில் திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பியுமான ஆ.ராசா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், "நீ இந்துவாக இருக்கிற வரை சூத்திரன்தான்; சூத்திரனாக இருக்கிற வரை பஞ்சமன். இந்துவாக நீ இருக்கிற வரை தீண்டத்தகாதவன். சூத்திரன் என்றால் வேசியின் பிள்ளை என்று பொருள். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்.. இந்தக் கேள்வியை உரக்க எழுப்பினால்தான் அது சனாதனத்தை முறியடிக்கும் அடிநாதமாக அமையும்" என்று பேசி இருந்தார். ஆ.ராசாவின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாஜக கடும் எதிர்ப்பு
இதனிடையே, ஆ.ராசாவின் இந்தப் பேச்சுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மனு தர்மத்தை அவதூறாக பேசியதன் மூலம் ஆ.ராசா, இந்துக்களை இழிவுபடுத்திவிட்டார் என பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், ஆ.ராசாவை திமுகவில் இருந்து நீக்க வேண்டும்; அவர் இந்துக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பாஜக தலைவர்களும், நிர்வாகிகளும் வலியுறுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி, அவர் மீது தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களிலும் புகார் அளித்து வருகின்றனர்.

அசராத ஆ.ராசா..
பாஜகவினரின் எதிர்ப்பு ஒருபுறம் அதிகமாகிக் கொண்டிருக்கும் போதிலும், ஆ.ராசா மனு தர்மம் குறித்த தனது நிலைபாட்டில் இருந்து இறங்கி வருவதாக தெரியவில்லை. அதேபோல, தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். இதுகுறித்து சில தினங்களுக்கு முன்பு பேசிய ஆ.ராசா, "தவறு செய்தால் மன்னிப்பு கேட்க வேண்டும். அதுதான் நியாயம். ஆனால் நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்? நான் இந்துக்களுக்கு எதிரி அல்ல இந்து மதத்தின் பெயரால் சொல்லப்படும் சனாதன தத்துவத்துக்கு தான் எதிரி" எனப் பேசியிருந்தார். ஆ. ராசாவின் இந்தப் பேச்சு பாஜகவினருக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெண்டைக்காய், எலுமிச்சை பார்சல்..
இந்நிலையில், ஆ.ராசாவுக்கு தங்கள் எதிர்ப்பை காட்டும் வகையில் பாஜகவினர் நூதன செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்ட பாஜகவினர் ஆ.ராசாவுக்கு வெண்டைக்காய்கள், எலுமிச்சை பழங்களை அடங்கிய பார்சலை விரைவுத் தபால் மூலமாக அனுப்பி வருகின்றனர். மேலும், அதில் ஒரு கடிதத்தையும் பாஜகவினர் வைத்துள்ளனர். அதில், "அனைத்து சாதியினர் மற்றும் பெரியவர்களை மரியாதை இல்லாமல் பேசும் ஆ.ராசா, வெண்டைக்காய் சாப்பிட்டு புத்தியை வளர்த்து, எலுமிச்சை பழத்தை தலையில் தேய்த்து குளிக்கவும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications