இளந்தலைவர் உதயநிதி...விரைவில் அமைச்சாராவார்...மெய்யநாதன் கருத்து மெய்யாகுமா?
தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலினை நியமிக்க வேண்டும் என முதல்வர் மு.க ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளார் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன்.
புதுக்கோட்டை: திமுகவின் வெற்றிக்கு அனைத்து விதங்களிலும் இளந்தலைவர் உதயநிதியின் பிரச்சாரம் காரணமாக அமைந்தது. அவரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக கூறியுள்ளார் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன்.
திமுகவின் இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அரசியலில் களமிறங்கினாலும் பிஸியாகவே இருக்கிறார்.
ஒரே ஒரு செங்கல்லில் எய்ம்ஸ் என்று எழுதி வைத்து ஓட்டு கேட்டது பலரையும் கவர்ந்தது. நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தங்களிடம் மட்டுமே இருப்பதாகவும் கூறி வாக்கு சேகரித்தார். திமுக ஜெயித்து ஆட்சிக்கு வந்து ஓராண்டாகி விட்டது.

உதயநிதி ஸ்டாலின்
சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதுமே உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சரவை பட்டியல் வெளியானபோது, அதில் உதயநிதியின் பெயர் இடம்பெறவில்லை. இது அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் ஏமாற்றமாக அமைந்தது.

உதயநிதி அமைச்சராவாரா?
எம்எல்ஏவாக வெற்றி பெற்றாலும் அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்கிறார். சட்டசபைக் கூட்டத்தொடரில் நகைச்சுவையாக பேசுகிறார். திமுக நிகழ்ச்சிகளிலும் அரசு நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்துகொண்டு அடுத்த தலைமுறை வாக்காளர்களை கவர்ந்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.
உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களாகவே கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

அமைச்சர்கள் வலியுறுத்தல்
தற்போது அமைச்சராக உள்ள பலரும் செய்தியாளர்களிடம் பேசும் போதோ, விழாக்களில் பங்கேற்று பேசும் போதோ உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் அல்லது துணை முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கின்றனர். அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கே.என்.நேரு, சேகர் பாபு போன்றவர்கள் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற தங்களின் விருப்பங்களை வெளிப்படையாகவே தெரிவித்தனர்.

அமைச்சர் மெய்யநாதன்
புதுக்கோட்டையில் பேசியுள்ள அமைச்சர் மெய்யநாதன், இளந்தலைவர் உதயநிதியின் பிரச்சாரம் திமுகவின் தேர்தல் வெற்றிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அதன் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். முதல்வர் ஸ்டாலின் விரைவில் முடிவெடுத்து அறிவிப்பார் என்று கூறியுள்ளார்.

எப்போது மெய்யாகும்?
உதயநிதியை அமைச்சராக்குவது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனாலும், உதயநிதிக்கு அமைச்சர் பதவி எப்போது கிடைக்கும் என்ற கேள்வி தொடர்ந்து வருகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா, இங்கிலாந்து செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னதாக உதயநிதி ஸ்டாலின், அமைச்சராக வாய்ப்பு உள்ளது என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. மெய்யநாதன் கருத்து மெய்யாகுமா பார்க்கலாம்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications