இந்தியாவில் 44.34 கோடி பேருக்கு வேக்சின் இதுவரை போடப்பட்டுள்ளது: குழந்தைகளுக்கு எப்போது வேக்சின்?
புனே: இந்தியாவில் இதுவரை 56,97,26,385 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 12,62,56,778 பேருக்கு மட்டுமே இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் 2 முதல் 18 வயது கொண்டவர்களுக்கான கொரோனா வேக்சின் செப்டம்பர் மாதம் வர வாய்ப்புள்ளதாக தேசிய வைரலாஜி இன்ஸ்டிடியூட் இயக்குனர் ப்ரியா ஆப்ரஹாம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மொத்தம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 44,34,69,607 பேருக்கு ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டு இருக்கிறது. தினசரி இந்தியாவில் சராசரியாக 40 முதல் 50 லட்சம் பேர் வேக்சின் பெற்று வருகிறார்கள். பெரும்பாலும் முதல் டோஸ் போட்டுக்கொள்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 6,20,83,090 பேர் வேக்சின் போட்டுகொண்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் 5,14,41,851 பேர் இதுவரை குறைந்தது ஒரு டோஸ் வேக்சினாவது போட்டுள்ளனர். குஜராத்தில் இதுவரை 4,19,47,590 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் இதுவரை 3,94,80,893 பேருக்கு வேக்சின் போடப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாடு
ராஜஸ்தான் மாநிலத்தில் 3,87,88,250 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 3,59,94,368 பேருக்கு வேக்சின் போடப்பட்டு இருக்கிறது. மேற்கு வங்கத்தில் 3,54,27,874 பேருக்கு வேக்சின் போடப்பட்டு இருக்கிறது. பீகாரில் 3,18,59,527 பேருக்கு வேக்சின் போடப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 2,78,23,361 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் தினசரி சராசரியாக 2 லட்சம் பேர் வரை அதிகபட்சம் வேக்சின் போட்டுக்கொள்கிறார்கள். 1,51,110 பேருக்கு இதுவரை இன்று வேக்சின் போடப்பட்டுள்ளது. 60க்கும் அதிகமானவர்களில் 125058508 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. 18 முதல் 45 வயது கொண்டவர்களில் 261485349 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. 45 முதல் 60 வயது கொண்டவர்களில் 179735114 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது.

குழந்தைகள் வேக்சின்
இந்த நிலையில் குழந்தைகளுக்கான வேக்சின் எப்போது கிடைக்கும், 18 வயதுக்கும் குறைவானவர்களுக்கு எப்போது வேக்சின் போடப்படும் என்பது குறித்து மக்கள் பலர் கேள்வி எழுப்பி தொடங்கி உள்ளனர். முக்கியமாக மூன்றாம் அலை மூலம் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வருவதால் குழந்தைகளுக்கான வேக்சின் எப்போது வரும் என்று பலர் எதிர்பார்க்க தொடங்கினார். இந்த நிலையில் ஐசிஎம்ஆர் கட்டுப்பாட்டில் தேசிய வைரலாஜி இன்ஸ்டிடியூட்டின் இயக்குனர் ப்ரியா ஆப்ரஹாம் இது தொடர்பாக பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி
அவர் அளித்த பேட்டியில், தற்போது குழந்தைகளுக்கான வேக்சினுக்கான 2-3ம் கட்ட சோதனை நடந்து வருகிறது. இது கோவாக்சின் சோதனை ஆகும். இதன் முடிவுகள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவுகள் மருந்து கட்டுப்பாட்டு அமைச்சகத்திடம் அளிக்கப்படும். அதன்பின் மருந்துகள் பயன்பாட்டிற்கு வரும். சோதனைகள் நடந்து வருகிறது.

செப்டம்பர்
பெரும்பாலும் செப்டம்பர் மாதம் அல்லது அதற்கு அடுத்த மாதங்களில் குழந்தைகளுக்கான வேக்சின் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவாக்சின் மருந்துதான் முதலில் குழந்தைகளுக்கான அனுமதியை பெறும் வாய்ப்பு உள்ளது. கடந்த மாதம் எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா இதே தகவலை வெளியிட்டு இருந்தார். கோவாக்சின் மருந்து குழந்தைகளிடம் சோதனை செய்யப்பட்டு வருகிறது செப்டம்பர் மாதம் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications