புனேவில் கண்டறியப்பட்ட தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.. புதிய உருமாறிய கொரோனா.. அறிகுறிகள் என்ன
புனே: மிகக் கடுமையான அறிகுறிகளைக் கொண்டுள்ள B.1.1.28.2 என்ற புதிய ஒரு உருமாறிய கொரோனா வகையை புனேவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே உருமாறிய கொரோனாவின் தாக்கம் மிக மோசமாக இருந்தது. கொரோனா பாதிப்பு தற்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது.
சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு, தற்போது தான் நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கும் கீழாகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 92 ஆயிரம் பேருக்கு மட்டுமே கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

உருமாறிய கொரோனா வகைகள்
நாட்டில் கொரோனா 2ஆம் அலை உச்சத்திற்குச் செல்ல பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இந்தியாவில் காட்டுத்தீயாகப் பரவிய உருமாறிய டெல்டா வகை B.1.617.2 கொரோனா இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்த கொரோனா மிக வேகமாகப் பரவியதால் நிலைமை கையை மீறிச் சென்றது. இந்நிலையில் புதிய உருமாறிய கொரோனா வகை ஒன்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

புதிய வகை கொரோனா
புனேவிலுள்ள தேசிய வைராலஜி மையத்தில், ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய B.1.1.28.2 உருமாறிய கொரோனாவை கண்டறிந்தனர். பிரேசில் நாட்டிலிருந்து திரும்பிய இருவருக்கு இந்த உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போதுவரை இந்தியாவில் உள்ள யாருக்கும் இந்த உருமாறிய கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பது சற்றே ஆறுதல் அளிக்கும் செய்தியாகும். இந்த B.1.1.28.2 உருமாறிய கொரோனா இந்தியாவில் கண்டறியப்படுவது இதுவே முதல்முறையாகும்.

தீவிர பாதிப்புகள்
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இந்த புதிய உருமாறிய கொரோனா தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. B.1.1.28.2 உருமாறிய கொரோனாவை அழிக்க அதிகளவில் ஆன்டிபாடிகள் தேவைப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் இந்த உருமாறிய கொரோனா பரவல் இல்லை. எனவே, இது குறித்து நாம் அச்சப்படத் தேவையில்லை என்றனர்.
Recommended Video

அறிகுறிகள் என்ன
இந்த புதிய கொரோனா வகையால் பாதிக்கப்படுவார்களுக்கு எடை இழப்பு ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நுரையீரலில் புண்கள், சுவாசக் குழாயில் கடுமையான வைரஸ் பாதிப்பு ஆகியவையும் ஏற்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் இந்த வைரஸ் பரவல் பரவலாக இல்லை என்பதை ஆராய்ச்சியாளர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

12 ஆயிரம் உருமாறிய வகைகள்
இந்தியாவில் சுமார் 12,200க்கும் மேற்பட்ட உருமாறிய கொரோனா உள்ளதாக அரசு நடத்தி வரும் ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இவை ஏற்படுத்தும் பாதிப்பு மிகக் குறைவாகவே உள்ளது. டெல்டா வகை கொரோனா மட்டுமே இந்தியாவில் அதி தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது. நாட்கள் செல்ல செல்ல உருமாறிய கொரோனா வகைகள் அதிகமாகத் தோன்றும். எனவே, எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாகத் தடுப்பூசி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம்












Click it and Unblock the Notifications