இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை
ராமநாதபுரம்: தியாகி இம்மானுவேல் சேகரனின் 62-வது நினைவு நாளையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
ஆண்டுதோறும் தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்தில் திமுக சார்பில் அந்தக் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட முகமாக விளங்கும் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் அஞ்சலி செலுத்துவது வழக்கம். இந்நிலையில், முதல்முறையாக இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்திற்கு சென்று ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தியுள்ளார். அவருடன் கனிமொழி, ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு என பெரிய வி.ஐ.பி.படையே சென்றது.

இந்நிலையில் பரமக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், தியாகி இம்மானுவேல் சேகரனார் தீண்டாமைக்கு எதிராக பாடுபட்டவர் என்றும் தீண்டாமையை ஒழிக்க போராடியவர் எனவும் புகழாரம் சூடினார்.அதை தொடர்ந்து பேசிய அவர், முதல்வர் இஸ்ரேல் செல்வேன் எனக் கூறுவது வேடிக்கை மிகுந்த விநோதமாக இருக்கிறது என விமர்சித்தார்.
அண்மையில் நடைபெற்ற 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நூலிழையில் ஆட்சியை தவறவிட்டது திமுக. 13 தொகுதிகளில் வெற்றிபெற்ற திமுகவால் பரமக்குடி, நிலக்கோட்டை போன்ற தனித்தொகுதிகளில் வெற்றிபெற முடியவில்லை. இதனால் தேவேந்திர குல வேளாளர் மக்களின் வாக்குகளை பெற முடியவில்லை என்பதை திமுக தலைமை உணர்ந்தது.
மேலும், தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருமாறு தேவேந்திர குல வேளாளர் அமைப்புகளை சேர்ந்த சிலர் ஸ்டாலினை அழைத்துள்ளனர். அதனால் அவர்களின் அழைப்பை ஏற்று இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்திற்கு சென்று மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications