ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அண்ணாமலையே ஷாக் ஆயிட்டாருங்க.. கட்டிப் பிடித்து முத்தம்! தேவர் நினைவிடத்தில் கூவிய ஆர்கே சுரேஷ்!

Google Oneindia Tamil News

இராமநாதபுரம் : பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வந்த நிலையில் நினைவிடத்தில் திடீரென ஆவேசம் அடைந்த நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் வருங்கால முதல்வர் அண்ணாமலை வாழ்க என முழக்கமிட்டதோடு அவரைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் 60வது குருபூஜை நடைபெறுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நிகழ்ச்சிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.

விழாவையொட்டி காலை 9 மணி முதலே நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் மாலையணிவித்து அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளதால் அவ்விடமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திடீரென வெடித்த டயர்.. பசும்பொன் செல்லும் வழியில் ஓபிஎஸ் ஆதரவாளர் கார் விபத்து.. போலீஸ் காயம்! பரபர! திடீரென வெடித்த டயர்.. பசும்பொன் செல்லும் வழியில் ஓபிஎஸ் ஆதரவாளர் கார் விபத்து.. போலீஸ் காயம்! பரபர!

 பாஜக தலைவர் அண்ணாமலை

பாஜக தலைவர் அண்ணாமலை

தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா. பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராகீம் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நினைவிட பொறுப்பாளர்கள் சார்பில் அண்ணாமலைக்கு திருநீரு வழங்கப்பட்டு தேவருக்கு அணிவிக்கப்பட்ட மாலையும் வழங்கப்பட்டது.

தேவர் ஜெயந்தி

தேவர் ஜெயந்தி

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் கலந்து கொள்ளாத நிலையில், இன்னும் சில நாட்களில் திண்டுக்கல் வரும் அவரை பசும்பொன் அழைத்து வருவோம் என அண்ணாமலை கூறியிருக்கிறார். இதனால் பாஜகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

உற்சாக வரவேற்பு

உற்சாக வரவேற்பு

இது தொடர்பாக பேசிய அண்ணாமலை,"மதுரை விமான நிலையத்திற்கு தேவர் திருமகனாரின் பெயரை சூட்டுவதில் பாஜகவிற்கு ஆட்சியேபனை இல்லை. அதற்கான நடவடிக்கைகள் பிரதமர் மூலம் எடுக்கப்படும், பிரதமர் தமிழகம் வரும் பொழுது சமுதாய அமைப்பினர் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்து தரப்படும் என கூறினார். இதனால் பிரதமர் வருகை கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

 முத்தம் கொடுத்த ஆர்கே சுரேஷ்

முத்தம் கொடுத்த ஆர்கே சுரேஷ்

முன்னதாக பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு வந்த பாஜக தலைவர் அண்ணாமலையை தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர். நினைவிடத்திற்கு வந்த அண்ணாமலையை திடீரென உற்சாக ஆவேசம் அடைந்த ஆர்கே சுரேஷ் வருங்கால முதல்வர் அண்ணாமலை வாழ்க என முழக்கமிட்டதோடு அவரைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். இதனால் அதிர்ச்சியான அண்ணாமலை வருங்கால முதல்வர் என கூற வேண்டாம் என கையை பிடித்துக் கொண்டார்.

English summary
When the BJP state president came to Annamalai to pay his respects at Pasumpon Muthuramalingath Devar memorial, actor and producer RK Suresh, who suddenly became enraged at the memorial, shouted "Long live Annamalai" and hugged and kissed him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X