4 திருமணம் செய்த கங்காதரன்.. ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாமல் 11 ஆண்டு செம ஜாலி.. சிக்கியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    4 திருமணம் செய்த கங்காதரன்.. ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாமல் 11 ஆண்டு செம ஜாலி

    ராமநாதபுரம்: நான் அவனில்லை என்ற ஒரு திரைப்படத்தை போல் ராமநாதபுரத்தில் நிஜமாகவே ஒரு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் பகுதியைச் சேர்ந்த கோமளாதேவிக்கும் மாடக்கொட்டான் பகுதியைச் சேர்ந்த கங்காதரனுக்கும் 2008-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 10 வயதில் ஹரிதரன் என்ற மகனும், 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் கங்காதரன் தனக்கு தெரியாமல் 3 திருமணங்களை செய்துக் கொண்டதாக ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கோமளாதேவி அளித்தார்.

    நிறுவனம்

    நிறுவனம்

    அதில் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் தனது கணவர் 4 பேருடனும் குடும்பத்தி நடத்திக் கொண்டிருப்பதற்கான புகைப்பட ஆதாரங்களை போலீஸாரிடம் வழங்கியுள்ளார். திருமணத்துக்கு பின்னர் கோமளாதேவியின் நகைகள், பணத்தை வைத்து தனியார் பணிகளுக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனத்தை கங்காதரன் துபாயில் நடந்து வந்துள்ளார்.

    கோமளாதேவி

    கோமளாதேவி

    அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து கோமளாதேவியையும் குழந்தைகளையும் பார்த்து விட்டு சென்றுவிடுவார். இதுபோல் ஊருக்கு வந்த கங்காதரனுக்கு ஒரு பெண் போன் செய்தார். அப்போது அவர் நீண்ட நேரமாக அந்த பெண்ணிடம் பேசியதை கண்டு கோமளாதேவிக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    கங்காதரனின் மனைவி

    கங்காதரனின் மனைவி

    இதையடுத்து அந்த பெண்ணின் எண்ணை குறித்து வைத்துக் கொண்ட கோமளாதேவி, கணவருக்கு தெரியாமல் அந்த பெண்ணுக்கு போன் செய்து யார் என்ன என கேட்டுள்ளார். அதற்கு அவர் கங்காதரனின் மனைவி என தெரிவித்துள்ளார்.

    3-ஆவது திருமணம்

    3-ஆவது திருமணம்

    இதையடுத்து கங்காதரனை தொடர்ந்து கண்காணித்த போது சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணை 2-வதாகவும் சென்னையை சேர்ந்த யமுனா என்ற பெண்ணை 3-ஆவதாகவும் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

    மகன்களுக்கு பெயர்கள்

    மகன்களுக்கு பெயர்கள்

    இவர்கள் இருவருக்கும் குழந்தைகள் உள்ளன. இவர்களது ரேஷன் கார்டிலும் கங்காதரனின் பெயர் இருந்தது தெரியவந்தது. முதல் மனைவியின் மகனுக்கு ஹரிதரன் என்றும் 2 ஆவது மனைவி கவிதாவின் மகனுக்கு ஸ்ரீதரன் என்றும் 3ஆவது மனைவியான யமுனாவின் மகனுக்கு கிரிதரன் என்றும் பெயர் சூட்டியுள்ளார்.

    4-ஆவது திருமணம்

    4-ஆவது திருமணம்

    முதல் மனைவியிடம் அழுது ஆர்ப்பாட்டம் செய்து சொத்துகளை எழுதி வாங்கிக் கொண்டார். இந்த நிலையில் சொத்துகளுடன் வெளியூர் செல்வதாக கூறிய கங்காதரன் தற்போது மீண்டும் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக கோமளா தேவி தெரிவித்தார். மேலும் அவர் சென்னையை சேர்ந்த தீபா என்பவரை 4-ஆவதாக திருமணம் செய்து கொண்டு அவருக்கும் ஒரு குழந்தை உள்ளது.

    நஷ்டம்

    நஷ்டம்

    கணவர் குறித்த விசாரணையில் இந்த 3 பெண்களும் துபாயில் கங்காதரன் தொடங்கிய டான்ஸ் கிளப்பில் பணியாற்றியவர்கள் என்பதும் இதில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+