திருப்பூர் ரிதன்யா ராமநாதபுரத்திலும்? பின்னாலிருந்து கட்டிப்பிடித்த கமுதி மாமனார்.. ஒரு விடிவு வராதா
ராமநாதபுரம்: ரிதன்யா விவகாரத்தின் அதிர்ச்சி முடிவதற்குள், ஷார்ஜாவில் 2 இளம்பெண்கள் இதே வரதட்சணை கொடுமைக்காக தற்கொலை செய்து கொண்ட பரபரப்பு ஓடிக் கொண்டிருக்கிறது.. ரிதன்யாவை போலவே, ராமநாதபுரத்திலும் ஒரு பெண் வரதட்சணை கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.. அத்துடன் மாமனாரின் பாலியல் அத்துமீறல்களுக்கும் ஆளாகியிருக்கிறார்.. இது அந்த பெண்ணுக்கு கடுமையான மனஉளைச்சலை தந்துள்ளது.. கடைசியில் கமுதியில் என்ன நடந்தது?
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ளஷத வீரமாச்சான்பட்டி.. இங்கு வசித்து வரும் தம்பதி முனீஸ்வரன் - ரஞ்சிதா.. இவர்களுக்கு 12 வயதில் மகன், 11 வயதில் மகள் உள்ளனர்.

ரஞ்சிதாவுக்கு 31 வயதாகிறது.. ஆனால், திருமணம் ஆனதிலிருந்தே ரஞ்சிதாவுக்கு வரதட்சணை கொடுமை இருந்து வந்ததாக தெரிகிறது.. கணவர் முனீஸ்வரன், மாமனார் அண்ணாதுரை மாமியார் சூரம்மாள் என 3 பேருமே, ரஞ்சிதாவை வரதட்சணையை கேட்டு, துன்புறுத்தி வந்திருக்கிறார்கள்..
ரஞ்சிதா மாமனார்
இந்த கொடுமைக்கு நடுவில் ரஞ்சிதாவிடம் அவரது மாமனார் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டிருக்கிறார்.. இதை பற்றி கணவரிடம் ரஞ்சிதா முறையிட்டாராம்.. ஆனால், கணவர் எதையுமே காதில் வாங்கி கொள்ளவில்லையாம்.. நாளுக்கு நாள் வரதட்சணை கொடுமையும், மாமனாரின் பாலியல் சேட்டைகளும் அதிகமானதால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ரஞ்சிதா, நேற்று முன்தினம் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி நெருப்பு வைத்து கொண்டார்..
அவரது அலறலை கேட்டு, அக்கம்பக்கத்திலிருந்தவர்கள், ரஞ்சிதாவை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கும், பிறகு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார்.. ஆனால், உடம்பெல்லாம் வெந்துபோய் இறந்துவிட்டார் ரஞ்சிதா..
சிகிச்சை -, வீடியோ
ஆனால், சிகிச்சையில் இருந்து இறப்பதற்கு முன்பு ரஞ்சிதா வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார்.. அதில், தன்னுடைய தற்கொலைக்கு காரணம், கணவர், மாமனார், மாமியார்தான்.. நாளுக்கு நாள் மாமனாரின் பாலியல் வக்கிரங்கள் அதிகரித்த நிலையில், சம்பவத்தன்று மாமனார் தன்னை பின்னால் வந்து கட்டிப்பிடித்ததாகவும், இதனால் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்
இந்த வீடியோவை பார்த்து ரஞ்சிதாவின் உறவினர்கள் கொந்தளித்து போயிருக்கிறார்கள்.. தற்கொலைக்கு காரணமான 3 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என்று மதுரை அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தினார்கள்.. அதுவரை ரஞ்சிதாவின் உடலை வாங்க மாட்டோம் என்று சீறினார்கள்.
இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட போலீசார் உறுதி தந்த பிறகே, ரஞ்சிதாவின் உடலை பெற்று சென்றனர்... பிறகு, ரஞ்சிதாவின் அப்பா பச்சமால், பெருநாழி போலீஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை தந்துள்ளார்..
ரஞ்சிதா தங்க நகைகள்
அதில், ''என்னுடைய மகள் ரஞ்சிதாவை பணம், தங்க நகை கேட்டு மருமகன் முனீஸ்வரன், அவரது தந்தை அண்ணாதுரை, தாய் சூரம்மாள் ஆகியோர் துன்புறுத்தியுள்ளனர். இதனால் ரஞ்சிதா மன உளைச்சலில் இருந்தார். யாரும் வீட்டில் இல்லாதபோது, மாமனார் அண்ணாதுரை, ரஞ்சிதாவிற்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனை பொறுக்க முடியாமல் ரஞ்சிதா தற்கொலை செய்து கொண்டார்'' என்று தெரிவித்துள்ளர்..
இந்த புகாரின்பேரில் பெருநாழி போலீஸாரும், கணவர் முனீஸ்வரன், மாமனார் அண்ணாதுரை, மாமியார் சூரம்மாள் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்..!!!
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications