சவுதிக்கு பறந்த பிசினஸ் ஜெட்.. சல்மான் உடன் இஸ்ரேல் நெதன்யாகு "சீக்ரெட் மீட்டிங்".. என்னமோ நடக்குது!
ரியாத்: சவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் உடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ரகசிய மீட்டிங் நடத்தியதாக கூறப்படுகிறது.
Recommended Video
2020ம் வருட பல திருப்பங்களையும் சுவாரஸ்யங்களையும் கொண்ட வருடமாக இருக்கிறது. பல வருட பகையாளிகளாக இருந்த அரபு நாடுகளும், இஸ்ரேலும் தற்போது நெருக்கம் காட்ட துவங்கி உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் இஸ்ரேலும் ஐக்கிய அரபு அமீரகமும் உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. இஸ்ரேல் - அமெரிக்கா - அமீரகம் இடையே நடந்த மூன்று நாடுகளுக்கு இடையே இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.

ஒப்பந்தம்
பாலஸ்தீனத்தில் இனி இஸ்ரேல் ஆக்கிரமிப்பை செய்ய கூடாது. பாலஸ்தீனத்தில் இன்னும் 17% நிலத்தை இஸ்ரேல் கேட்டு வந்த நிலையில், அந்த ஆக்கிரமிப்பை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று இஸ்ரேல் - அமீரகம் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் இதற்கு இஸ்ரேல் உத்தரவாதம் எதுவும் அளிக்கவில்லை. இந்த ஒப்பந்தம் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் ராணுவ, பொருளாதார ரீதியான ஒப்பந்தங்களை இனி இஸ்ரேல் மேற்கொள்ள முடியும். இரண்டு நாட்டிற்கு இடையே அதிகாரபூர்வ விமான போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது.

என்ன
இந்த ஒப்பந்தத்தில் சூடான், பஹ்ரைனும் சேர்ந்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தை ஈரான் எதிர்த்து வந்த நிலையில் இந்த ஒப்பந்தம் குறித்து சவுதி அரேபியா கருத்து தெரிவிக்காமல் மௌனம் காத்து வந்தது. பாலஸ்தீன மக்களின் பிரச்னையை பேசாமல் ஒப்பந்தத்தை மேற்கோள்ள கூடாது. பாலஸ்தீன மக்கள் குறித்தும் இஸ்ரேல் பேச வேண்டும் என்று மட்டும் சவுதி தெரிவித்து வந்தது. ஆனால் அதையும் கூட சவுதி வெளிப்படையாக உடைத்து பேசவில்லை.

இப்போது எப்படி
இந்த நிலையில்தான் சவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் உடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ரகசிய மீட்டிங் நடத்தியதாக கூறப்படுகிறது. பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு சொந்தமான பிசினஸ் விமானம் சவூதி சென்றுள்ளது. விமான டிராக்கிங் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டது. சவுதியின் நியோம் பகுதியில் இந்த விமானம் 2 மணி நேரம் இருந்துள்ளது.

மீட்டிங்
2 மணி நேரம் இந்த மீட்டிங் நடந்து இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சீக்ரெட் மீட்டிங் போல நடந்தது என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த மீட்டிங் குறித்து இரண்டு நாட்டு தரப்பும் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. இரண்டு நாட்டு உறவை சுமூகமாக்க கடந்த சில வாரங்களாக அமெரிக்கா முயன்று வந்தது. இந்த நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

உறுதி
இந்த சந்திப்பு உறுதியானால்.. இஸ்ரேல் பிரதமர் ஒருவர் சவுதி சென்றது இதுவே முதல்முறை என்று கூறப்படும். இரண்டு நாட்டு உறவில் இது புதிய உச்சமாக இருக்கும். முன்னதாக இஸ்ரேல் - அமீரகத்தின் இடையிலான ஒப்பந்தத்தை பாலஸ்தீனம் துரோகம் என்று விவரித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது சவுதியும் இஸ்ரேலுக்கு நெருக்கமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
-
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications