அலறிய சேலம்.. ரூ.4 லட்சத்துக்காக உரிமையாளர் படுகொலை! வடமாநில தொழிலாளர்கள் அட்டூழியம்
சேலம்: ரூ.4 லட்சம் பணத்தை பறிப்பதற்காக கடையில் 3 மாதமாக பணிபுரிந்து வந்த பீகாரை சேர்ந்த தொழிலாளர்களே உரிமையாளரை கத்தியால் பல இடங்களில் கொடூரமாக குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உரிமையாளர்கள் சம்பளம் தராததால் கொலை செய்ததாக போலீசாரிடம் பீகார் தொழிலாளர்கள் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.
குறைவான ஊதியம் பெற்றுக்கொண்டு நீண்ட நேரம் வேலை செய்கிறார்கள் என்ற காரணத்திற்காக வட மாநில தொழிலாளர்களை கட்டுமானம், உணவகம், சலூன் என அனைத்து தொழில்களிலும் உரிமையாளர்கள் நியமனம் செய்து வருகிறார்கள்.
இதனால் தமிழ்நாட்டை சேர்ந்த சேர்ந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது ஒருபுறம் இருக்க மறுபக்கம், இந்த வட மாநில தொழிலாளர்களால் ஏற்படும் குற்றச்சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

வட மாநிலத் தொழிலாளர்கள்
பீகார், உத்தரப்பிரதேசம், குஜராத், உத்தராகண்ட், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் பணிபுரிய நாள்தோறும் ஏராளமான தொழிலாளார்கள் வருகை தந்து வருகின்றனர். சென்னை, திருச்சி, கோவை, மதுரை, தஞ்சாவூர், சேலம், நெல்லை, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் வட மாநில தொழிலாளர்களே நிறைந்து உள்ளனர்.

சேலம் கொலை
இவ்வாறு வரும் வட மாநில தொழிலாளர்களில் சிலர் பணி நேரம் போக மீதம் உள்ள நேரங்களில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற ஒரு கோர கொலை சம்பவம்தான் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே அரங்கேறி இருக்கிறது.

இரும்பு விற்பனை கடை
தருமபுரி மாவட்டம் பொம்மிடி குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் சேலம் மாவட்டம் காடையாம்பட்டியை சேர்ந்த பிரேம் குமாருடன் சேர்ந்து, காடையாம்பட்டியை அடுத்து அமைந்து இருக்கும் தீவட்டிப்பட்டியில் கம்பி மற்றும் சிமெண்ட் விற்பனை செய்யும் மொத்த வியாபார கடை ஒன்றை நடத்தி வந்து இருக்கிறார்.

பீகார் தொழிலாளர்கள்
இந்த கடையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த 2 இளைஞர்களை வேலைக்கு சேர்த்து இருக்கின்றனர். இவர்கள் இருவரும் கடையில் கடந்த 3 மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடையில் கடந்த ஒருவாரமாக வியாபாரம் செய்த தொகை ரூ.4 லட்சம் சந்தோஷிடம் இருந்து உள்ளது 2 வடமாநிலத்தவர்களுக்கும் தெரியவந்து இருக்கிறது.

கொடூர கொலை
இதனை பறிக்க திட்டமிட்ட அவர்கள், இரவு 10 மணிக்கு மேல் சந்தோஷ் கடையை விட்டு வெளியே செல்ல முயன்றபோது மறைத்து வைத்திருந்த கத்தியால் உடலின் பல இடங்களில் கொடூரமாக குத்தி உள்ளார்கள். அதன் பின்னர் அவரிடம் இருந்த ரூ.4 லட்சம் பணத்தை அவர்கள் பறித்துக்கொண்டு தப்பிச்செல்ல முயன்று இருக்கின்றனர்.

பிரேம்குமாருக்கு வெட்டு
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பிரேம்குமார் சந்தோஷை காப்பாற்ற முயன்று வட மாநில இளைஞர்களை தடுக்க சென்றபோது அவரையும் கத்தியால் சரமாரியாக தாக்கி உள்ளார்கள். உடனே அங்கிருந்த கற்களை கொண்டு பிரேம் குமார் பீகார் இளைஞர்களை தாக்கி கூச்சலிடவே அவர்கள் அங்கிருந்து ஓட முயன்றனர்.

உயிரிழந்த சந்தோஷ்
சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தப்பியோட முயன்ற 2 பீகார் கொலையாளிகளையும் மடக்கிப் பிடித்தனர். அத்துடன் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த சந்தோஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

போலீஸ் தீவிர விசாரணை
இந்த படுகொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பொதுமக்கள் பிடித்துக் கொடுத்த 2 வடமாநில இளைஞர்களிடம் போலீசார் விசாரணை செய்தபோது, உரிமையாளர்கள் தங்களுக்கு ஊதியம் வழங்காமல் இழுத்தடித்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளனர்.

ஊதியம் கொடுக்கவில்லை என புகார்
ஆனால் வட மாநில தொழிலாளர்களுக்கு முறையாக ஊதியம் கொடுத்ததாக உரிமையாளர் தெரிவித்து உள்ளார். வட மாநில இளைஞர்கள் கொள்ளையடிப்பதற்காக இந்த கொலையை செய்தார்களா? அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என்பது பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications