சமூக நீதியின் மறுபெயர் பாட்டாளி மக்கள் கட்சி! ராமதாஸை போல் ஒரு தலைவர் இந்தியாவில் இல்லை! -அன்புமணி
சேலம்: சமூக நீதியின் மறுபெயர் தான் பாட்டாளி மக்கள் கட்சி என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அதேபோல் ராமதாஸை போல் ஒரு தலைவர் இந்தியாவில் இல்லை என்றும் சமூக நீதியை காக்கும் தலைவர் அவர் எனவும் அன்புமணி புகழாரம் சூடினார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அன்புமணி பேசியதாவது;
''சமூக நீதி என்றாலே அதற்கு மறு பெயர் பாட்டாளி மக்கள் கட்சி, மருத்துவர் அய்யா தான். ஆளுங்கட்சி திமுக, சமூகநீதி சமூகநீதி என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் சமூக நீதிக்கு இந்தியாவில் ஒரு தலைவர் உண்டு என்றால் அது மருத்துவர் அய்யா தான்.
தமிழ்நாட்டிலும் சரி, இந்தியாவிலும் சரி மொத்தம் ஆறு இட ஒதுக்கீட்டிற்கு காரணமானவர் மருத்துவர் அய்யா தான். இப்படி எந்த ஒரு தலைவரும் இந்தியாவில் கிடையாது.
காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று முதன் முதலில் கூறியது பாட்டாளி மக்கள் கட்சி தான். இந்த அன்புமணி தான் முதலில் கூறினான். அதற்காக பிரச்சாரம், போராட்டம் நடத்தி, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் உரிய அழுத்தம் கொடுத்து, கொடுத்து காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வைத்தோம்.
தமிழ்நாடு இப்படி இருக்கிறது, பீஹார் அப்படி இருக்கிறது என்றெல்லாம் கூற மாட்டேன். அந்த ஒப்பிடும் கிடையாது. தமிழ்நாட்டுக்கும் - சிங்கப்பூருக்கும் தான் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அந்த அளவுக்கு என்னால் வளர்ச்சி கொண்டு வர முடியும். இதை எல்லாம் நீங்கள் தான் சிந்திக்க வேண்டும்.
காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சனையாக வருங்காலத்தில் உருவாகப் போகிறது. இதன் காரணமாகவே உலக நாடுகள் அனல் மின் நிலையங்களை மூடி வருகின்றன. ஆனால் இவர்கள் அடுத்த அடுத்த சுரங்கங்களை விரிவாக்கம் செய்வதற்காக என்எல்சி நிர்வாகத்திற்கு நிலத்தை பிடுங்கி கொடுத்து, உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்காக எவ்வளவோ போராடி பார்த்து விட்டேன்.
எத்தனையோ முறை கடலூர் மாவட்டம் ஆபத்தில் இருக்கிறது, காப்பற்றவேண்டும் என்று நான் போராடி பார்த்தேன். அப்போதெல்லாம் இவர்கள் வரவில்லை. இப்போது கொதிக்கிறார்கள் என்றால், அது தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில் சுரங்கம் வருவது தான் காரணம். தஞ்சாவூர் மாவட்டம் மட்டும்தான் பொன் விளைகின்ற பூமியா? கடலூர் மாவட்டம் இல்லையா?
இந்த விவகாரத்தை 10 நாட்களுக்கு முன்பே சட்டப்பேரவையில் நமது பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பினார்கள். அப்போது அமைச்சர், அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, அன்புமணி சொல்வது போல் எல்லாம் கிடையாது. எங்களுக்கு தெரியாமல் யாராவது ஏலம் விட்டுவிட முடியுமா? என்றார் அமைச்சர் தென்னரசு.
அடுத்த நாள் நான் ஆதாரத்தை வெளியிட்டேன். ஆதாரத்தை வெளியிட்ட பிறகு ஆம் உண்மைதான் என்கிறார் அமைச்சர். இப்போ என்ன செய்யப் போகிறீர்கள்? என்று நேற்று நான் அறிக்கை விட்டதற்குப் பிறகு, விவசாய சங்கங்கள், தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைவருக்கும் கோபம் வந்துவிட்டது. ஏன்? கடலூர் மாவட்டம் என்றால் அவர்களுக்கு கவலை இல்லை. ஒரத்தநாடு பகுதியில் நிலக்கரி எடுப்பது தான் அவர்களுக்கு கோபம்.
முதலமைச்சர் சட்டப்பேரவையில் கூறுகிறார், நான் டெல்டா காரன். டெல்டாவில் நிலக்கரி எடுக்க விடமாட்டேன் என்கிறார். அப்போ டெல்டா பகுதி இல்லை என்றால் நிலக்கரி எடுக்க விட்டுவிடுவீர்களா? அங்கு மக்கள் இல்லையா? அங்கு விவசாயம் செய்யவில்லையா? அங்கு விவசாயிகள் இல்லையா? வீடு, கிராமம், மக்கள், வாழ்வாதாரம் இல்லையா? டெல்டாவில் மட்டும்தான் இது அனைத்தும் இருக்கிறதா?

ஒரு முதலமைச்சர் பேசுகிற பேச்சா இது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாக்கப்பட வேண்டும். கடலூரில் எடுத்தாலும் சரி, டெல்டா பகுதியில் எடுத்தாலும் சரி, திருப்பூரில் எடுத்தாலும் சரி, எங்கு எடுத்தாலும் அதை நீங்க தான் தடுத்து பாதுகாக்க வேண்டும்.
டெல்டாவில் எடுத்தால் மட்டும் உங்களுக்கு கோபம் வருகிறது. கடலூரில் எடுத்தால் கோபம் வராதா உங்களுக்கு? என்ன பேச்சு இதெல்லாம். இதை நான் விடப்போவதாக இல்லை.'' இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசியிருக்கிறார்.
-
கீழ்வேளூரில் வடிவேல் ராவணன், அம்பத்தூரில் சேகர்.. பாமகவின் 3 வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி! -
திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி.. செளமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது? -
அய்யாவுக்கு கடைசி சான்ஸ்.. ’மாம்பழம்’ கேட்டு அடம் பிடிக்கும் ராமதாஸ்! இன்று கோர்ட்டில் விசாரணை! -
சினிமாவில் சிகரெட் தடை டூ ‘மாற்றம் முன்னேற்றம்’ வரை - 2016இல் அன்புமணி செய்த கார்ப்பரேட் பிரச்சாரம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications