என் பார்வைக்கு கொண்டு வாங்க.. 4வது மாடி மீட்டிங்கில் பறந்த "பொறி".. கடிந்து கொண்ட ஸ்டாலின்!என்னாச்சு

முக்கியமாக ஜாதி, மத ரீதியான மோதல்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் அழுத்தமாக எச்சரித்ததாக கூறப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

சேலம்: சட்டம் ஒழுங்கு தொடர்பாக நேற்று போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறார். நேற்று நடத்த மீட்டிங்கில் முதல்வர் ஸ்டாலின் கண்டிப்புடன் பேசியதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை வைக்க தொடங்கி உள்ளன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் சட்டம் ஒழுங்கு குறித்து விமர்சனங்களை வைத்து வருகின்றன.

முக்கியமாக சென்னையில் நடந்த சில கொலை சம்பவங்கள், கோயம்புத்தூரில் கோர்ட் வாசலில் நடந்த தாக்குதல் சம்பவம், திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவங்கள் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

 சட்டம் ஒழுங்கு

சட்டம் ஒழுங்கு

இதையடுத்தே சட்ட ஒழுங்கு குறித்த புகார்களை எதிர்கட்சிகள் வைத்து வருகின்றன. இந்த நிலையில்தான் சட்டம் ஒழுங்கு தொடர்பாக முக்கியமான ஆலோசனை கூட்டம் ஒன்றை முதல்வர் ஸ்டாலின் நடத்தினார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு போலீஸ் பிரிவு பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் சேலம் மண்டலம் சார்பாக நேற்று மீட்டிங் நடத்தப்பட்டது. சேலம் சென்று உள்ள முதல்வர் ஸ்டாலின் நேற்று இந்த மீட்டிங்கில் கலந்து கொண்டார். ஆட்சியர் அலுவலகத்தில் 4வது மாடியில் உள்ள மீட்டிங் ஹாலில் இந்த ஆலோசனை நடைபெற்றது.

ஆலோசனை

ஆலோசனை

இந்த ஆலோசனையில் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் கலந்து கொண்டார். சரக டி.ஐ.ஜி, 4 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர். இது போக இன்னும் சில போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதேபோல் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் எல்லோரும் சேலம் மண்டலத்திற்கு கீழ் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை கொண்டவர்கள். இவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் சுமார் 1 மணி நேரம் நேற்று மீட்டிங் நடத்தினார். அதற்கு முன்னதாக பல்வேறு திட்டங்கள் தொடர்பாக ஆட்சியர்களுடன் மீட்டிங் நடத்திய பின்புதான் முதல்வர் ஸ்டாலினின் இந்த மீட்டிங் தொடங்கியது.

என்ன பேசினார்?

என்ன பேசினார்?

இந்த மீட்டிங்கில் தொடக்கத்தில் இருந்து கண்டிப்புடன் பேசிய முதல்வர் ஸ்டாலின்.. சேலம் மண்டலத்தில் பாதுகாப்பை அதிகப்படுத்துங்கள். ரோந்து பணிகளை இரவு நேரங்களில் தீவிரப்படுத்துங்கள். முக்கியமாக ஏடிஎம்கள், கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகளுக்கு பாதுகாப்பை அதிகப்படுத்துங்கள். சாதி, மத ரீதியான கலவரங்களை அனுமதிக்க முடியாது. அதை தடுப்பதற்கு ஏற்றபடி கவனிப்புடன் இருங்கள். முக்கிய பிரச்சனைகளை உடனே என்னுடைய கவனத்திற்கு கொண்டு வாருங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருக்கிறார். முக்கியமாக ஜாதி, மத ரீதியான மோதல்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் அழுத்தமாக எச்சரித்ததாக கூறப்படுகிறது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

இது போக சிறு சிறு ரவுடிகள் மோதல், வெட்டு குத்து, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் ஸ்டாலின் கண்டிப்புடன் பேசியதாக கூறப்படுகிறது. பொதுவாக சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது, எத்தனை கைதுகள் நடந்து உள்ளன, இரவு நேர ரோந்துகளில் எத்தனை கைதுகள் நடந்து உள்ளன என்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இந்த மீட்டிங்கில் கேட்டறிந்துள்ளார். இதேபோல் விரைவில் மற்ற மண்டலங்களிலும் மீட்டிங்குகள் நடக்கும் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+