கருணாநிதி போட்ட கண்டிஷன்.. சேலத்திற்கும் கலைஞருக்கும் உள்ள பிணைப்பு.. நெகிழ்து பேசிய மு.க ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சேலம்: திமுகவின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்ற போது சேலத்தில் இருந்துதான் கருணாநிதி சென்னைக்கு சென்றார் என்பதுதான் வரலாறு. அவரது நூற்றாண்டின் தொடக்கத்தில் முதல் சிலை நிறுவப்படுவது மிக மிக பொருத்தமான ஒன்று என்று முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார்.

சேலம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை சேலம் வந்தார். இன்று சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 1,713 சதுரடி பரப்பில் 4 அடி உயரத்தில் பீடமும், 16 அடி உயரத்தில் முழுஉருவ வெண்கல சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை திறந்து வைத்தார்.

DMK was formed in 1949 during Karunanidhis stay in Salem- MK Stalin Speech

அதன்பிற்கு சேலம் மாவட்டத்தில் முடிவு நிறைவு பெற்ற பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:- நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கருணாநிதி. கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடங்கப்பட்டு இருக்கும் இந்த காலத்தில் சேலம் மாநகரில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து விட்டு மன நிறைவோடு இந்த நிகழ்ச்சிக்கு வந்து இருக்கிறேன்.

அண்னாவின் பூங்காவில் பூத்த மணம் தரும் மலர்தான் கருணாநிதி. சேலத்திற்கும் கருணாநிதிக்குமான நட்பு என்பது அன்பான நட்பு.. ஒரு குடும்ப நட்பு.. கருணாநிதி ஒரு முழு கதை வசனகர்த்தாவாக ஆக்கிய ஊர் சேலம் தான். இன்றைக்கும் சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் முகப்பு கம்பீரமாக காட்சி அளித்து கொண்டு இருக்கிறது. அந்த மாடர்ன் தியேட்டர்ஸின் உரிமையாளர், திரைப்பட தயாரிப்பாளரான டிஆர் சுந்தரம், கருணாநியை சேலத்திற்கு அழைத்தார்.

அப்போது கருணாநிதிக்கு ரூ. 500 ரூபாய் சம்பளம் கொடுத்தார். இங்கு பணியாற்ற வருவதன் காரணமாக எனது இயக்க பணிகளுக்கு எந்த இடையூறும் வரக்கூடாது என்று நிபந்தனை வைத்தார். அப்படி எதுவும் இருக்காது என்ற சுந்தரம் சொன்ன பிறகுதான் கருணாநிதி சேலத்தில் பணியாற்ற ஒப்புக் கொண்டார். அப்படி பணியாற்ற தொடங்கிய நேரத்தில் வெளியான படம் தான் மந்திரகுமாரி. கருணாநிதி சேலத்தில் தங்கியிருந்த கால கட்டத்தில் 1949- ஆம் ஆண்டு திமுகவே உருவானது.

திமுகவின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்ற போது சேலத்தில் இருந்துதான் கருணாநிதி சென்னைக்கு சென்றார் என்பதுதான் வரலாறு. அந்த அளவிற்கு கருணாநியின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்த ஊர்தான் சேலம். அவரது நூற்றாண்டின் தொடக்கத்தில் முதல் சிலை நிறுவப்படுவது மிக மிக பொருத்தமான ஒன்று. இத்தகைய சேலம் மாவட்டத்தில் கருணாநிதி முதல்வரக இருந்த போது, ஏராளமன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதை நெஞ்சை நிமிர்த்தி என்னால் சொல்ல முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+