இளைஞர் அணி மாநாடு திடலில்.. நட்சத்திரங்களுக்கு போட்டியாக ஜொலித்த ‘Drone Show’.. பூரித்த உதயநிதி
சேலம்: சேலம் இளைஞரணி மாநாடு நாளை தொடங்க உள்ள நிலையில், இன்று டிரோன் கண்காட்சி நடைபெற்றது. இந்த நிலையில், 1500 ட்ரோன்களைக் கொண்டு வான்வெளியில் ஒளி வீசச்செய்த 'Drone Show’, நட்சத்திரங்களுக்குப் போட்டியாக அமைந்தது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்விட் பதிவிட்டுள்ளார்.
திமுக இளைஞரணி மாநாடு நாளை சேலத்தில் நடைபெறுகிறது. சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது. சென்னையில் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் இந்த திமுக இளைஞரணி மாநாடு இருமுறை ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து திமுக இளைஞரணி மாநாடு நாளை நடத்துவதற்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி மாநாட்டையொட்டி, திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினால் சுடர் ஏற்றப்பட்டு சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டது. இன்று மதியம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம் வந்தடைந்தார்.
1,500 ட்ரோன்கள்: உதயநிதி ஸ்டாலினுடன் அவரது மகன் இன்பநிதியும் சேலம் வந்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது மகனுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில், இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து புறப்பட்டு சேலம் வந்தடைந்தார். முதல்வர் ஸ்டாலினுக்கு அங்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதனை தொடந்து மாநாடு நடக்கும் இடத்திற்கு வந்து மாநாட்டிற்கான ஏற்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து திமுக இளைஞரணி மாநாட்டின் சுடரை ஏற்றி வைத்தார். இதேபோல் நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள 1,500 பேர் கொண்ட இருசக்கர வாகனப் பேரணியையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் பிறகு மாநாட்டு திடலில், 1,500 ட்ரோன்களைக் கொண்டு ட்ரோன் ஷோ நடத்தப்பட்டது.
இளைஞர் அணி மாநாடு திடலில்.. நட்சத்திரங்களுக்கு போட்டியாக ஜொலித்த ‘Drone Show’.. பூரித்த உதயநிதிhttps://tamil.oneindia.com/news/salem/drone-show-held-today-at-salem-youth-wing-conference-minister-udayanidhi-stalin-says-this-575993.html#mkstalin #UdhayanidhiStalin #DMKYouthWingConference #Salem
இதனை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். இதில், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் படம் வானில் ஜொலித்தது. ஒவ்வொருவரின் படமாக வண்ணமயமாக வானில் காட்சியளிக்கும் வகையில் ட்ரோன் ஷோ நடத்தப்பட்டது. தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி, உதயநிதி சூரியன் சின்னம், தமிழ்நாடு எல்லை வரைபடம் என ஒவ்வொன்றாக காட்சிப்படுத்தப்பட்டது. தமிழ் முதல்வர் மு.க ஸ்டாலின் இந்த கண்கவர் காட்சிகளை ரசித்து பார்த்தார்.
உதயநிதி ஸ்டாலின் ட்விட்: இந்த நிலையில், 1500 ட்ரோன்களைக் கொண்டு வான்வெளியில் ஒளி வீசச்செய்த 'Drone Show’, நட்சத்திரங்களுக்குப் போட்டியாக அமைந்தது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்விட் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- இயக்கத்தின் இதயமான இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு சேலத்தில் நாளை கூடவுள்ள நிலையில், மாநாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மாநாட்டுத்திடலில் இன்றைய தினம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முக்கியமாக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில், நமது திராவிட இயக்க கொள்கைப் பயணத்தை 1500 ட்ரோன்களைக் கொண்டு வான்வெளியில் ஒளி வீசச்செய்த 'Drone Show’, நட்சத்திரங்களுக்குப் போட்டியாக அமைந்தது. தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் என நம் தலைவர்களின் உருவங்கள் - நம் தலைவர்கள் கட்டிக்காத்த தமிழ்நாட்டின் வரைப்படம் - நம் உதயசூரியன் சின்னம் - கழக இளைஞரணியின் இலட்சினை போன்றவற்றை வானில் ஜொலிக்கச் செய்த 'Drone Show’ நம் மனதில் என்றும் நிலைத்திருக்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications