நகைக்கடன் தள்ளுபடி.. வாய்ப்பே இல்லை.. எடப்பாடி பழனிசாமி போட்ட ஒரே போடு.. சொன்ன விஷயம்
சேலம்: நகைக்கடன் மோசடி விவகாரம் குறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எந்த ஆட்சியாக இருந்தாலும் வங்கி முறைகேட்டில் நடவடிக்கை எடுப்பார்கள். வங்கிகளிலும் நகைக் கடன் ரத்து செய்யப்படும் என கூறினார்கள். ஆனால், இப்போது கூட்டுறவு வங்கி நகைக் கடன் ரத்து செய்வதில் பல நிபந்தனைகள் விதிக்கப்படுவதால், அனைத்து மக்களும் பயன்பெற வாய்ப்பில்லை என்றார்.
தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியின் இறுதியில் கூட்டுறவு வங்கியில் 5 சவரன் அல்லது அதற்கு கீழ் நகைக்கடன் வாங்கியவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த கடன் தள்ளுபடியால் 43 லட்சம் பேர் பயன்பெறுவார்கள் என அன்றைய முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

ஐ பெரியசாமி தகவல்
சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், கூட்டுறவு நகைகடன் தள்ளுபடி விவகாரத்தில் மோசடி நடைபெற்றுள்ளதா என்று ஆய்வு செய்ய அமைச்சர் ஐ பெரியசாமி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன்படி அதிகாரிகள் ஆய்வு செய்ததில் பல கோடி ரூபாய் மோசடிகள் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கிரிமினல் வழக்கு
இதையடுத்து கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் வாங்குவதற்காக மோசடியில் ஈடுபட்டவர்கள், தனியார் நகை அடகு கடை வைத்து மோசடி செய்தவர்கள், உடந்தையாக இருந்த அதிகாரிகள் அனைவரும் சிக்கி உள்ளனர். அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது கூட்டுறவுதுறை.இந்நிலையில் திண்டுக்கல்லில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, நகைக்கடன் வாங்கியதில் பெரிய தவறு நடைபெற்றுள்ளது. தவறுகள் செய்தவர்கள் மீது நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதுடன், பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் நடந்த மோசடிகள் குறித்து விரிவாக விளக்கம் அளித்தார்.
Recommended Video

வெளிச்சத்திற்கு வந்தது
ஒரே ஆதார் எண்ணை பயன்படுத்தி ஒரே நபர் பல சங்கங்களில் லட்சக்கணக்கில் நகை கடன்களை பெற்றிருப்பதும், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பல கூட்டுறவு சங்கங்களில் பல நகை கடன்களின் மூலம் லட்சக்கணக்கிலான ரூபாய் கடன் பெற்றிருந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து தகுதியின் அடிப்படையிலான உரிய பயனாளிகளை தவிர மற்றவர்கள் பெற்ற நகை கடன்களை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மோசடியில் ஈடுபடாத தகுதியானவர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

கூட்டுறவு கடன்கள்
இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எந்த ஆட்சியாக இருந்தாலும் வங்கி முறைகேட்டில் நடவடிக்கை எடுப்பார்கள். தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. அனைத்திலும் முறைகேடு நடைபெற்றதாக தெரியவில்லை என்றார்

வாய்ப்பு இல்லை
நகைக்கடன் தள்ளுபடி விவகாரம் குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற கோரிக்கையை நம்பி 43 லட்சம் பேர் காத்திருந்தனர். தேர்தல் நேரத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் நகைக் கடன் ரத்து செய்யப்படும் என கூறினார்கள். ஆனால், இப்போது கூட்டுறவு வங்கி நகைக் கடன் ரத்து செய்வதில் பல நிபந்தனைகள் விதிக்கப்படுவதால், அனைத்து மக்களும் பயன்பெற வாய்ப்பில்லை என்றார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications