விடிய விடிய கொட்டிய கனமழையால் சின்னாபின்னமான ஏற்காடு - சுற்றுலா பயணிகள் பாதிப்பு
விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் ஏற்காடு சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் நேற்று மாலை சுமார் 5 மணி முதல் இன்று காலை 7 மணி வரை விடிய விடிய கனமழை பெய்தது இதன் காரணமாக ஏற்காடு சாலை பகுதியில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டிற்கு செல்ல முடியாமலும் ஏற்காடு மலையில் இருந்து கீழே வர முடியாமலும் தவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வார காலமாகவே பலத்த மழை பெய்து வருவதால் பல மாவட்டங்களில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வளைவைத் தாண்டி தண்ணீர் விழுகிறது.

இன்று டெல்டா மாவட்டங்கள்,கடலூர்,சேலம், ஈரோடு ,நீலகிரி,அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.
நாளைய தினம் டெல்டா மாவட்டங்கள், கடலூர் ,சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

நாளை மறுநாள் கிருஷ்ணகிரி ,ஈரோடு ,சேலம் ,தருமபுரி ,திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ,திருவண்ணாமலை , விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் நேற்று மாலை சுமார் 5 மணி முதல் இன்று காலை 7 மணி வரை விடிய விடிய கனமழை பெய்தது இதன் காரணமாக ஏற்காடு சாலை பகுதியில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

ஏற்காடு பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரதான சாலையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏற்காடு பகுதியில் அதிக அளவிலான கனரக வாகனங்கள் பயணிப்பதால் அதிக அளவிலான மழை பெய்து வருவதால் சாலை பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மண்சரிவு சாலை பழுது உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
Recommended Video
இந்தநிலையில் ஏற்காடு அடிவாரத்தில் நேற்று பெய்த கடும் மழையின் காரணமாக குப்பனூர் டு ஏற்காடு செல்லும் சாலை மண் சரிந்தது மேலும் ஏற்காடு பகுதியில் பெய்த மழையின் நீரானது விளைநிலங்களில் தண்ணீரில் மூழ்கி உள்ளது இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர் மேலும் அந்த பகுதியில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது இதனால் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் பகுதிக்கு செல்ல முடியாமலும் ஏற்காடு பகுதியில் இருந்து கீழே வர முடியாமலும் தவித்து வருகின்றனர்.

விடிய விடிய கொட்டித்தீர்த்த மழையால் ஏற்காடு சாலை சின்னாபின்னமாகியுள்ளது. சாலையை சீரமைக்கும் பணியினை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டனர். ஏற்காடு டிஎஸ்பி தையல்நாயகி மற்றும் ஏற்காடு காவல் துறையினர் வனத்துறையினர் உள்ளிட்ட பலர் மண்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு நேரடியாக வந்து சாலையை சீரமைக்கும் பணியை துரிதப்படுத்தினர். விரைவில் சாலை சீரமைக்கும் பணி முடிந்தவுடன் போக்குவரத்து தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலை சீரமைக்கும் பணி சிறிது தாமதமாகவே நடைபெற்று வருகிறது.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications