இந்தியாவில் தமிழகம்தான் அமைதியான மாநிலம்..இளைஞர்களுக்கு வேலை இல்லை என்ற நிலை மாறும்..அமைச்சர் பேட்டி
சேலம்: தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலை இல்லை என்ற நிலையை மாற்றும் முயற்சியில் தமிழக முதல்வர் ஈடுபட்டு வருகிறார் என்றும் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகம் தான் அமைதியான மாநிலம் என்று நிறைய முதலீட்டாளர்கள் தமிழம் நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் சி.வி கணேசன் தெரிவித்துள்ளார்.
சேலம் கோரிமேடு பகுதியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை தொழில் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுதுறை அமைச்சர் சி.வி கணேசன் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் அந்த தொழிற்பயிற்சி நிலையம் முழுவதும் சுற்றி பார்த்தார். தொடர்ந்து அங்கு செய்ய வேண்டிய பணிகள் மற்றும் தேவைகள் என்ன என்ன? என்பது குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.

அமைச்சர் ஆய்வு
இதன் பின்னர் பயிற்சி வகுப்புக்கு சென்ற அமைச்சர் சி.வி கணேசன், மாணவர்களுடன் உரையாடினார். தொடர்ந்து மாணவர்களிடம், உங்களுக்கு சரியாக பயிற்சி தர்ப்படுகிறதா? என்றும், வேறு என்ன பயிற்சிகள் உளங்களுக்கு வேண்டும் என்றும் ஒவ்வொரு மாணவர்களிடமும் தனித்தனியாக கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து வெளியே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி கணேசன், 'இளைஞர்கள் 100 சதவீதம் வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காகவே இந்த ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக கூறினார்.

100 சதவீதம் வேலைவாய்ப்பை பெற
தொடர்ந்து இது தொடர்பாக அமைச்சர் சி.வி.கணேசன் கூறுகையில், ''தமிழகம் முழுவதும் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறேன். மேலும் அங்கு படிக்கும் இளைஞர்களுக்கு 100 சதவீதம் வேலைவாய்ப்பை பெற்று தரவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தொழிற்பயிற்சி நிலையத்திலும் சுமார் 36ஆயிரம் இளைஞர்கள் படித்து வருகிறார்கள். இது தவிர 25 ஆயிரம் இளைஞர்கள் முதல் ஆண்டில் சேர்ந்துள்ளனர்.

63 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு
கடந்த ஆண்டு 63 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்று தரப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 66 தொழிற்பயிற்சி நிலையங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 99 ஆயிரம் இளைஞர்களுக்கு பெற்று தரப்படும். இதேபோல் கூடிய விரைவில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் நிலை உருவாகும். இதற்காக பாடுபட்டு வருகிறோம்.

இளைஞர்களுக்கு வேலை இல்லை என்ற நிலை மாறும்
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகம் தான் அமைதியான மாநிலம் என்று நிறைய முதலீட்டாளர்கள் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலை இல்லை என்ற நிலையை மாற்றும் முயற்சியில் தமிழக முதல்வர் ஈடுபட்டு வருகிறார். தமிழக முதல்வர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க 71 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூபாய் 31 கோடியே 98 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கி உள்ளார். மேலும் இதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டு வருகிறது'' இவ்வாறு அவர் கூறினார்.
-
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்? -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
தமிழகத்தில் மின்சாரம் துண்டிப்புக்கு திமுக ஆதரவு மின் அதிகாரிகளே காரணம்.. அமைச்சர் ரஞ்சித்குமார் -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான்












Click it and Unblock the Notifications