மேட்டூர் அணை நீர்மட்டம் 109 அடியை எட்டியது.. நீர்வரத்து அதிகரிப்பு.. வெள்ள அபாய எச்சரிக்கை
சேலம்: காவிரியில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது. கர்நாடகாவில் பெய்யும் மழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109.51 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் மொத்த உயரம் 120 அடி ஆகும். அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 15,550 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பே மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது. அதாவது கடந்த 60 வருடங்களில் ஒருமுறை கூட மேட்டூர் அணை இவ்வளவு சீக்கிரம் திறக்கப்பட்டது இல்லை. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, தற்போது 90,873 கன அடியாக அதிகரித்து உள்ளது.
கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பியதால் அங்கிருந்து நீர் வெளியேற்றப்பட்டதும் இந்த அதிக நீர் வரத்திற்கு காரணம் ஆகும். மேட்டூர் ஆணை வரலாற்றில் 68வது முறையாக அணை 100 அடியை எட்டியுள்ளது.
இதையடுத்து நீர் பாசன பகுதிகளில் ஆற்றின் கரையோரங்களில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.18 லட்சம் கனஅடியாக தொடர்கிறது. இதனால் மேட்டூருக்கும் நீர் வரத்து உயர்ந்து உள்ளது.. 4வது நாளாக இன்றும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு 4வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. முன்னதாக கோடை காலத்திலேயே விடாமல் மழை பெய்து வந்தது. அப்போது குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து மே 24ஆம் தேதி அன்று நீரை திறந்துவிட உத்தரவிடப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். சுதந்திரம் அடைந்த பின் இதற்கு முன் இப்படி மே 24ம் தேதியே ஒருமுறை கூட மேட்டூர் அணை திறந்து விடப்பட்டது இல்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications