சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திடீரென உதயநிதி கான்வாய்க்குள் புகுந்த வண்டி.. டக்கென சுதாரித்த ஓட்டுநர்..பெரும் விபத்து தவிர்ப்பு!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கான்வாய் வரும்போது கம்பி ஏற்றிவந்த வண்டி குறுக்கே புகுந்தது.

Google Oneindia Tamil News

சேலம் : சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கான்வாய்க்குள், நீண்ட கம்பிகளை ஏற்றி வந்த வாகனம் குறுக்கே புகுந்து மோதும் வகையில் சென்ற நிலையில், பாதுகாப்பு வாகன ஓட்டுநரின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்வீஸ் ரோட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென பைபாஸில் இருந்து ஒரு சரக்கு ஆட்டோ சர்வீஸ் ரோட்டில் புகுந்தது.

இதனை உடனே கவனித்து சுதாரித்த கான்வாய் வாகன ஓட்டுநர் வண்டியை இடதுபுறம் திருப்பி மண் திட்டில் நிறுத்தினார். பின்னால் வந்த வாகனமும் பிரேக் போட்டு யூ-டர்ன் அடித்து மோதலைத் தவிர்த்தது.

எம்.எல்.ஏ, அமைச்சரை எல்லாம் விடுங்க.. நான் உங்க வீட்டு செல்லப் பிள்ளை.. உங்க சகோதரன்: உதயநிதி பேச்சு எம்.எல்.ஏ, அமைச்சரை எல்லாம் விடுங்க.. நான் உங்க வீட்டு செல்லப் பிள்ளை.. உங்க சகோதரன்: உதயநிதி பேச்சு

சேலத்தில் உதயநிதி

சேலத்தில் உதயநிதி

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அயோத்தியாபட்டினம் பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு நேற்று மாலை திமுக கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதாக சேலத்தில் இருந்து எடப்பாடிக்கு காரில் சென்று கொண்டிருந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். சர்வீஸ் சாலையில் முன்னால் பாதுகாப்பு கான்வாய் வாகனங்கள் சென்றுகொண்டிந்தன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வாகனத்தை பின்தொடர்ந்து மற்ற அமைச்சர்களின் வாகனங்களும் சென்று கொண்டிருந்தன.

குறுக்கே புகுந்த சரக்கு ஆட்டோ

குறுக்கே புகுந்த சரக்கு ஆட்டோ

கொண்டலாம்பட்டி அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரின் வாகனங்கள் கான்வாய் வாகனங்களோடு சென்று கொண்டிருந்தபோது திடீரென போக்குவரத்து விதியை மீறி நீண்ட கம்பிகளை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு வாகனம் ஒன்று சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த அமைச்சர்களின் கான்வாய் வாகனங்களுக்கு இடையே புகுந்தது.

சடன் பிரேக்

சடன் பிரேக்

இதனை சற்றும் எதிர்பாராத பாதுகாப்பு வாகன ஓட்டுனர்கள் கான்வாய்க்குள் புகுந்து வந்த சரக்கு ஆட்டோவில் மோதாமல் இருக்க தங்களது வாகனங்களை இடது புறமாக திருப்பினர். முதல் வாகனம் ஒடித்து நிறுத்தியதில் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த மண் திட்டின் மீது வாகனம் மோதி நின்றது. உடனே சுதாரித்துக்கொண்ட பின்னால் வந்த வாகனங்களும் அடுத்தடுத்து திடீரென பிரேக் போட்டு நின்றன. மோதலைத் தவிர்க்க பின்னால் வந்த கான்வாய் வாகனம் பிரேக் போட்டு யூ டர்ன் அடித்தது.

சாமர்த்தியத்தால் விபத்து தவிர்ப்பு

சாமர்த்தியத்தால் விபத்து தவிர்ப்பு

கான்வாய் வாகன ஓட்டுனர்களின் சாமர்த்தியத்தால் மற்ற வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து உடனடியாக அந்த சரக்கு வாகனம் ஓரங்கட்டப்பட்டது. பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கான்வாய் தடையின்றி அங்கிருந்து வேகமாக புறப்பட்டுச் சென்றது. பின்னர் கான்வாய்க்குள் கம்பியுடன் புகுந்த சரக்கு வாகன ஓட்டுனரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

பரபரப்பு

பரபரப்பு

இந்நிலையில், இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் வருவதை வீடியோ எடுத்த நபர்கள் இதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமோ, வாகனங்களுக்கு சேதமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A vehicle loaded with long TMT bars rammed into Minister Udhayanidhi Stalin's convoy near Edappadi in Salem district, and a major accident was averted due to the dexterity of the driver of the security vehicle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X