Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மரணத்தின் விளிம்பை காட்டிய செல்பி.. காவிரியில் வெள்ளத்தில் சிக்கிய 3 பேர் மீட்பு.. திக்திக் நிமிடம்

Subscribe to Oneindia Tamil

சேலம்: மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் செல்பி எடுக்க முயன்று தண்ணீரில் சிக்கிய 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கேஆர்எஸ், கபினி அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் காவிரியில் அதிகளவில் நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

கடந்த 8ம் தேதி முதல் கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு வினாடிக்கு ஒரு லட்சத்துக்கும் அதிக கனஅடிக்கு மேல் நீர்வரத்து உள்ளது.

நிரம்பிய மேட்டூர் அணை

நிரம்பிய மேட்டூர் அணை

இதனால் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வர துவங்கியது. கடந்த 10ம் தேதி முதல் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதனால் அணை நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்தது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான கனஅடி நீர் வந்ததால் அணை வேகமாக நிரம்பியது. நேற்று காலை 10 மணிக்கு அணை முழுகொள்ளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து பூஜை செய்யப்பட்டு உபரிநீர் காவிரியில் திறந்து விடப்பட்டது.

கரைபுரண்டு ஓடும் வெள்ளம்

கரைபுரண்டு ஓடும் வெள்ளம்

தற்போது மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 1 லட்சத்துக்கும் அதிகமான கனஅடி நீர் திறந்து விடப்பட்டுகிறது. இதனால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான இடத்துக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை சார்பில் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்களில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. துணிதுவைக்க, குளிக்க, செல்பி எடுக்க யாரும் காவிரி ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

செல்பியால் வெள்ளத்தில் சிக்கினர்

செல்பியால் வெள்ளத்தில் சிக்கினர்

இதனையும் மீறி சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்த பிரபு (வயது 20), கவின் 21, தினேஷ் 21, ஆகியோர் நேற்று மாலை காவிரி ஆற்றில் இறங்கி செல்பி எடுக்க முயன்றனர். இவர்கள் இறங்கியபோது குறைந்த அளவு தண்ணீர் வந்த நியைில் திடீரென்று தண்ணீரின் அளவு அதிகரித்தது. இதனால் அவர்கள் வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். இதை அங்கிருந்த மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

ஒரு மணிநேரத்துக்கு பிறகு மீட்பு

ஒரு மணிநேரத்துக்கு பிறகு மீட்பு

உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காவிரியில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் தீயணைப்பு வீரர்களால் அவர்களின் அருகே செல்ல முடியவில்லை. இதனால் மீட்பு பணி சவாலாக இருந்தது. இருப்பினும் தொடர்ந்து போராடிய வீரர்கள் கயிறு மூலம் 3 பேரையும் வெள்ளத்தில் இருந்து மீட்டனர். சுமார் ஒரு மணிநேர போராட்டத்துக்கு பிறகு 3 பேரையும் பத்திரமாக மீட்ட வீரர்களுக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+