மேட்டூர் அணையின் நீர்மட்டம் 49 அடியாக சரிவு.. கவலையில் விவசாயிகள்.. மின் உற்பத்தியும் பாதிக்கும்
சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 49 அடியாக சரிவடைந்துள்ளது. அணையின் நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்படுவதோடு சுரங்க மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின் உற்பத்தி முற்றிலும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அணை தண்ணீரின் மூலம் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்கு குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்போது 103.35 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது மளமளவென குறைந்து வருகிறது.

வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்து காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை கைகொடுக்கவில்லை. கர்நாடகா அணைகளில் 100 அடிக்கு மேல் நீர் இருந்தாலும் குறைவான அளவே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து நீர்மட்டம் தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.
கடந்த மாதம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அதிகபட்சமாக காவிரி ஆற்றில் 23ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் வரத்தொடங்கியதால் சுமார் 4 நாட்கள் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. கர்நாடகா அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பதற்கு அம்மாநில விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து தண்ணீர் திறப்பை கர்நாடகா அரசு குறைத்து விட்டது.
இதனிடையே கர்நாடகா அணைகளில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் தொடங்க உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் அதிக அளவில் தண்ணீர் திறக்க மறுத்து விட்டது. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
பயிர்களை காப்பாற்ற முடியாமல் கருகிய நெற்பயிர்களைப் பார்த்து கண்ணீர் விட்டு வருகின்றனர்.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அடியோடு சரிந்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 700 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து விநாடிக்கு 5550கன அடியானது. அணைக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்துள்ள நிலையில் அணையில் இருந்து விநாடிக்கு 8000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் நேற்று 51.37 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 49.68 அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கும் போது மேட்டூர் அணை மின் நிலையத்தில் 50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 45 அடியாக இருக்கும் வரை மட்டுமே சுரங்க மின் நிலையம் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து மின் உற்பத்தி செய்ய முடியும். இன்னும் ஓரிரு நாட்களில் அணையின் நீர்மட்டம் 45 அடியை நெருங்கும் என்பதால் சுரங்க மின் நிலையத்தில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு அணையின் கீழ் மட்ட மதகுகள் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இதனால் சுரங்க மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின் உற்பத்தி முற்றிலும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications