பயங்கர சத்தம்.. சேலம் ஏற்காட்டில் திடீர் நிலஅதிர்வு.. குலுங்கிய வீடு, கடைகள்.. மக்கள் அலறல்-ஓட்டம்
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இன்று பயங்கர சத்தத்துடன் நிலஅதிர்வு ஏற்பட்டதால் வீடு, கடைகள் குலுங்கிய நிலையில் மக்கள் அலறியடித்து ஓடினர்.
சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும் அதனை சுற்றிய கிராமங்களில் இன்று மதியம் பயங்கர சத்தம் கேட்ட நிலையில் லேசாக நிலம் அதிர்ந்துள்ளது. இதனால் வீடு, கடைகளில் இருந்த பொருட்கள் குலுங்கியது. இதனால் பொதுமக்கள் உயிருக்கு பயந்து வீடு, கடைகளை விட்டு வெளியே ஓடிவந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஏற்காடு உள்ளது. கோடை வாழிட தலமாக அறியப்படும் இந்த ஏற்காடு தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று. ஊட்டி, கொடைக்கானல் போன்று கோடை வாழ்தலமாக ஏற்காடு உள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 5326 அடி உயரத்தில் உள்ளது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் இந்த ஏற்காடு சேலத்தில் இருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

சுற்றுலா தலமான ஏற்காடு
சேலத்தில் இருந்து மலைப்பாதை வழியாக மொத்தம் 20 கொண்டைஊசி வளைவுகளை கடந்து சென்றால் இதமான சூழல் நிலவும் சுற்றுலாத்தலமான ஏற்காட்டை பொதுமக்கள் அடையலாம். ஆண்டுதோறும் இங்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.

பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு
இந்நிலையில் தான் இன்று மதியம் சுமார் 12 மணியளவில் ஏற்காடு டவுனில் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இது எங்கிருந்து வருகிறது என மக்கள் அறிவதற்கும் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. சுமார் 3 வினாடிகள் வரை ஏற்பட்ட நிலஅதிர்வால் கடைகள், வீடுகளில் இருந்த பொருட்கள் லேசாக குலுங்கி உள்ளன.

மக்கள் அலறியடித்து ஓட்டம்
இதனால் பயந்துபோன மக்கள் உடனடியாக அலறியடித்து வீடு, கடைகளை விட்டு வெளியே ஓடிவந்துள்ளனர். அதன்பிறகு நிலஅதிர்வு எதுவும் உணரப்படவில்லை. இந்த அதிர்வானது ஏற்காடு டவுன் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களிலும் உணரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஏற்காடு மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிகாரிகள் சொல்வது என்ன?
இதற்கிடையே தான் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என சிலர் தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, ‛‛நில அதிர்வு குறித்து சீஸ்மோகிராபியில் எதுவும் பதிவாகவில்லை. சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும். நிலஅதிர்வு தொடர்பாக ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் தெரிவிக்கப்படும்'' என்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications