தமிழ்நாட்டை பாழ்படுத்த நினைக்கும் கூட்டம்.. எனது பயணத்தை கொச்சைப்படுத்துகிறது.. மு.க ஸ்டாலின் தாக்கு
சேலம்: தமிழ்நாட்டை பாழ்படுத்த நினைக்கும் கூட்டம் எனது வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்துகிறது. அவர்களுக்கு கொச்சைப்படுத்த மட்டும் தான் தெரியும். எதையும் அழிக்க மட்டும் தான் தெரியும். ஆக்க தெரியாது என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை சேலம் வந்தார். இன்று சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 1,713 சதுரடி பரப்பில் 4 அடி உயரத்தில் பீடமும், 16 அடி உயரத்தில் முழுஉருவ வெண்கல சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை திறந்து வைத்தார்.

அதன்பிற்கு சேலம் மாவட்டத்தில் முடிவு நிறைவு பெற்ற பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:- நான் வெளிநாட்டுக்கு போயிருந்தேன். ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்று இருந்தேன். ஏறத்தாழ 3 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளது.
வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ள பெரும்பலானா நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இந்தியாவில் தமிழ்நாடும் குறிப்பாக சென்னையும் உலக முதலீட்டாளர்களை ஈர்க்க கூடிய மையமாக அமைந்துள்ளது. ஜப்பானை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. பல நிறுவனங்கள் உள்ளது.
ஆனால், அவர்களுக்கு தமிழ்நாட்டை அறிமுகம் செய்ய வேண்டியது இல்லை. அவர்களுக்கு ஏற்கனவே அறிமுகம் ஆன தமிழ்நாட்டை கடந்த 10 ஆண்டுகளை போல அல்லாமல் தற்போது நடைபெறும் திராவிட மாட்ல் ஆட்சியில் தொழில் வாய்ப்புகளும் முதலீடுகளுக்கும் ஏற்ற சூழல் நிலவுவதை சுட்டிக்காட்டி தமிழர் பண்பாட்டின் அடிப்படையில் நேரடியாக சென்று அழைப்பு விடுத்தோம்.
அழையா வீட்டிற்கு எந்த விருந்தாளியும் வரமாட்டார்கள். நம்முடைய படித்த இளைஞர்கள் வளத்தை வெளிச்சம் போட்டு காட்டினால்தான் முதலீட்டாளர்கள் தமிழகம் வர ஆர்வம் காட்டுவார்கள். அப்படி முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வரக்கூடிய நிறுவனங்கள் நேரில் நம்முடைய கட்டமைப்புகளை பார்த்து ஆய்வு செய்து முதலீடுகளை செய்வார்கள். அதனைக் கூட தமிழ்நாட்டை பாழ்படுத்த நினைக்கும் ஒரு கூட்டம் கொச்சைப்படுத்துகிறது.
அவர்களுக்கு கொச்சைப்படுத்த மட்டும் தான் தெரியும். எதையும் அழிக்க மட்டும் தான் தெரியும்.ஆக்க தெரியாது. அந்த வேலையைத்தான் அவர்கள் செய்கிறார்கள்..செய்யட்டும் நான் கவலைப்படவில்லை...போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும் என கடந்து செல்பவன் நான்..கருணாநிதி வழியில் வந்தவன் நான்.மக்கள் பணியாற்றவே நேரம் கிடைக்கவில்லை. மக்களுக்கு பிணியாக இருக்கக் கூடியவர்களூக்கு பதில் சொல்ல எனக்கு நேரம் இல்லை" என்றார்.
-
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications